Home » சாமிபூமி – 2
சாமிபூமி தொடர்கள்

சாமிபூமி – 2

ஐயனார்

மலையடிவாரக் கிராமத்துக்கு இந்தச் சாமி வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. காலையில் மக்கள் காட்டு வேலைக்குச் சென்றபோது கண்டிருக்கின்றனர். ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அருகில் ஒரு வெள்ளைக் குதிரை கட்டப்பட்டிருந்தது. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. சாமியாரைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.

அவரால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆற்றில் குளிப்பார். துணிகளைத் துவைத்துப் பிழிந்து உலர்த்தப் போட்டிருப்பார். குதிரையைக் குளிப்பாட்டுவார். அதற்குக் காட்டில் தானியங்கள் பறிப்பார். தொட்டியில் தண்ணீர் ஊற்றி அதைக் கலந்து வைப்பார். தியானம் செய்வார். தூங்குவார். பார்க்கும்போது இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருப்பார்.

இவர் பிறந்தது தென்னிந்தியாவில் இப்போதைய தமிழகப் பகுதியில்தான். அப்போது இந்து மதம் இப்பகுதிக்கு வரவில்லை. மக்கள் இயற்கையை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தனர். இந்தச் சாமியைப் பெற்றவர்களுக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லை. சூரியனையும் சந்திரனையும் தீவிரமாக வேண்டினார்கள். பலன் கிடைத்தது. அப்பெண் கர்ப்பமானாள். ஆண் குழந்தை பிறந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!