அரிஸ்டாட்டில் கற்றுத் தந்த கோட்பாடு
(மாவீரன் அலெக்சாண்டர்)
கிமு நான்காம் நூற்றாண்டு. ஐரோப்பாவின் மாசிடோனியாவிலிருந்து புறப்பட்ட ஒரு பேரியக்கம், அன்றைய உலகப் பேரரசான பெர்சியாவை வீழ்த்தியது. எகிப்து முதல் இந்தியாவின் சிந்து நதிக்கரை வரை தன் பேரரசின் எல்லையை விரித்துக் கொண்டே சென்றது. உலக வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் மாபெரும் நிலப்பரப்பை வென்ற மாவீரன் அலெக்சாண்டரின் வாழ்க்கை, வெறும் போர்க்கள வெற்றிச் செய்திகளால் மட்டுமே நிரம்பியது அல்ல.
அலெக்சாண்டரின் அரசவை ஆவணக் காப்பாளர்களான ஏமெனெஸ், டியோடோடஸ் ஆகியோர் பதிவுசெய்து, பிற்கால வரலாற்று ஆசிரியர்களான புளூடார்க் மற்றும் அர்ரியனால் சான்றளிக்கப்பட்ட ‘எஃபெமரைட்ஸ்’ (Ephemerides) என்ற தினசரி நாள்குறிப்புகள் உள்ளன. இவற்றின்படி, அலெக்சாண்டரின் இருபத்து நான்கு மணிநேரத் திட்டமிடல் இப்படியாக ஆரம்பமானது.
அலெக்சாண்டரின் விடியல் சூரியன் உதிப்பதற்கு முன்பே தொடங்கிவிடும். போர்க்கள முகாமாக இருந்தாலும் சரி, நீண்ட பாலைவனப் பயணமாக இருந்தாலும் சரி, விழித்தெழுந்ததும் ஓடும் நதி அல்லது நீரோடையின் குளிர்ச்சியான நீரில் குளித்து முடிப்பார். அடுத்து அன்றைய வெற்றிக்குத் தேவையான பலியிடும் நிகழ்வு நடக்கும்.
















Add Comment