Home » நல்லது கெட்டது – 2
தொடர்கள் நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 2

Terms & Conditions

இன்று எல்லோருமே இணைய வணிகச் செயலிகளைக் கொண்டு வீட்டுக்குப் பொருட்களையோ சாப்பாட்டையோ அடிக்கடி வாங்குகிறோம். ஆனால் அந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எந்த அளவு வாடிக்கையாளர் நலனில் அக்கறையாக இருக்கின்றன? இதை அறிந்துகொள்ள அந்தந்தச் செயலிகளின் பயன்பாட்டு விதிமுறைகளை (Terms & Conditions) படித்தால் போதும். ஆனால் யாரும் படிப்பதில்லை. தப்பித்தவறிப் படிக்க முயன்றாலும் எதுவுமே புரியாது. அந்த அளவு சட்ட நுட்பங்கள் நிறைந்திருக்கும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை வேறொரு பக்கத்திலிருந்து எதிர்கொண்டேன். நான் உருவாக்கிய ஒரு செயலியை (அப்போது அவற்றுக்கு ஷேர்வேர் என்று பெயர்) முதன்முதலாக இணையம் வழி விற்கத் தொடங்கியிருந்தேன். அதற்கு வசதியாக, ஜெர்மனியில் இருந்த ஒரு பணப் பட்டுவாடா நிறுவனத்தின் சேவையைப் பெறத் தொடர்புகொண்டேன். அவர்களோ, உங்கள் செயலியின் இணையப் பக்கத்தில் உங்களது பயன்பாட்டு விதிமுறைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

எனக்குத் தெரிந்த வழக்கறிஞருக்கு மென்பொருள் துறையில், அதுவும் அயல்நாட்டுச் சட்டங்களில் பழக்கமில்லை. எதைக் கேட்டாலும் பதில் சொல்லும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்ற பூதம் அப்போதில்லை. இணையத்தில் தேடி, கண்ணில்பட்ட மற்ற நிறுவனங்களின் பக்கங்களில் இருந்து எனக்குப் புரிந்ததை மட்டும் வெட்டி ஒட்டி ஒரு விதிமுறையை எழுதினேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், இவற்றை எழுதுவது எளிதில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!