Home » மூன்று பேர், மூன்று நிமிடம்
அறிவியல்-தொழில்நுட்பம்

மூன்று பேர், மூன்று நிமிடம்

‘இந்தியாவின் ஆயிரக்கணக்கான சிற்றூர்களில் இருக்கும் பெட்டிக்கடைகளை நடத்துபவர்களும் எங்கள் வாடிக்கையாளர்கள்தான். நாள் முழுவதும் கடையிலேயே இருப்பவர்களுக்குத் திறமைகள் இருக்கும், ஆசைகள் இருக்கும், ஆனால் நேரம் இருக்காது. உதாரணமாக ஒரு யூட்யூப் சேனலை நடத்துவது எவ்வளவு சுலபம் என்பது தெரிந்தால் இவர்களும் வெற்றி பெறலாம். இப்படி வேலையில் இருப்பவர்களால் கற்க முடியாது என்கிற நிலை மாற வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திலேயே சில நிமிடங்களுக்குள் கற்றுக் கொடுப்பதே எங்களின் நோக்கம்’ என்கிறார் ரோஹித் சௌத்ரி.

இவர்தான் ‘சீகோ’ (seekho) செயலியின் நிறுவனர். இன்று ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் கற்றலுக்கான செயலியை உருவாக்கியவர்.

இணைய வழிக் கல்வி என்றாலே நாம் இந்திய அரசின் ஐஐடிகள் நடத்தும் ஸ்வயம், தமிழக அரசின் கல்வி டிவி, சிக்கலில் இருக்கும் பைஜூ போன்றவை நினைவுக்கு வரும். இவை எல்லாமே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானவை. ஆனால் கற்றல் என்பது ஒவ்வொரு மனிதனும் கடைசி மூச்சு இருக்கும் வரை செய்ய ஆசைப்படுவது.

உதாரணமாக, புதுவிதமான ரசம் வைப்பதிலிருந்து வீட்டிலேயே காற்றாலை செய்வது வரை இன்று யூட்யூப்பில் கற்கலாம். நேரமும் ஆர்வமும் இருந்தால் போதும். ஆனாலும் அங்கே இருக்கும் பல்லாயிரம் வீடியோக்களில் இருந்து நமக்குத் தேவையானதைத் தேடுவது எளிதில்லை. அதுவும் பயனருக்குப் புரிகின்ற மொழியில் குறும்படங்களாகக் கிடைப்பது கடினம். இவற்றின் தரமும் பல சமயங்களில் சுமாராகவே இருக்கும். இதனால் நமது நேரம் வீணாகும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!