2025 ஜனவரி பிறந்தவுடன் மனத்தினில் இருந்த எண்ணமெல்லாம் இந்த ஆண்டு புத்தகம் எழுதிவிடவேண்டும் என்பதே. அதற்கான முனைப்பில் பல்வேறு தலைப்புக்களில் சிந்திப்பதும், அதனைச் சீர்செய்வதுமாய் இருந்தேன்.
என்னுடையது முதல் புத்தகம், எனவே வாத்தியாரின் ஆலோசனைப்படி, அவர் காட்டும் வழியிலேயே அதனை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நம் அனைவருக்குள்ளும் செயல் தேவதையும், சோம்பேறி சாத்தானும் உண்டல்லவா? தேவதை என்னை ஆசிர்வதிக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் பன்னிரண்டு மாதங்கள் முழுவதுமாய் கையில் உள்ளதே, அதற்குள் எழுதுவதற்கு என்ன அவசரம் என இடையிடையே கேட்டுக் கொண்டிருந்த சாத்தானின் குரலுக்குச் செவி சாய்த்து விட்டேன். கண்மூடித் திறப்பதற்குள் வருடம் முடிந்துவிட்டது. சரி, போகட்டும். தாமதம் ஆனாலும் தரமான திட்டமொன்று இப்போதுதான் கைகூடியுள்ளது. இனி தேவதைகள் என்னை ஆசீர்வதிக்கட்டும்.
இந்த வருடத்துக்கான எழுத்து சார்ந்த எண்ணிக்கை என்னிடத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. மெட்ராஸ் பேப்பருக்கு என்னுடைய பங்களிப்பு கூட இரட்டை இலக்கம்தான். ஏப்ரல் மாதம் வரையிலும் சோஷியல் மீடியாவில் இருந்தேன். அதன்பின்பு அங்கும் கனத்த, நீடித்த மௌனம். ஆரம்பித்த வாட்ஸப் சேனலும் திரிசங்கு சொர்க்கம்போல அந்தரத்தில் நிற்கிறது. இந்த வருடம் இப்படியே முடிந்துவிடுமோ என்று கவலையாகக்கூட இருந்தது.















Add Comment