ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா (1908-1967) ஆங்கில மொழிபெயர்ப்பு: Barbara Shelby தமிழில்: ஆர். சிவகுமார் ஓடாத வண்டி ஒதுங்கி நிற்பதற்காகப் போடப்பட்ட தண்டவாளத்தின் மீது முதல் நாள் இரவிலிருந்து அந்த ரயில் பெட்டி நின்றிருந்தது. ரியோவிலிருந்து வந்த விரைவு வண்டியில் சேர்க்கப்பட்டு வந்த அது இப்போது நிலைய...
Tag - இலக்கியம்
40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம் என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...
ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் ஆங்கிலத்தில்: Donald A. Yates தமிழில்: பிரம்மராஜன் ஒரு வன்மம்மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவனது நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும் சாம்பல் நிறத்திலும் இருந்தது...
கெய்ட் ஷோப்பின் (Kate Chopin) தமிழில்: ஆர். சிவகுமார் திருமதி மேலட் ஒரு இதய நோயாளி என்பதால் அவளுடைய கணவனின் இறப்புச் செய்தியை அவளிடம் எவ்வளவு மென்மையாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு மென்மையாகச் சொல்ல பெருமுயற்சி எடுக்கப்பட்டது. அவளுடைய சகோதரியான ஜோஸஃபின்தான் அந்தச் செய்தியை உடைந்த வாக்கியங்களாலும்...
ரங்கமணி (ஞானக்கூத்தன்) புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க் கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு...
37 எழுத்தும் வாழ்வும் மறுநாள் மாலை ஆபீஸ் விட்டதும் அறைக்கு வராமல், வீட்டில் தங்கவைத்து, அறையும் பார்த்துக்கொடுத்த ஜீவாவைப் பார்க்க மரியாதை நிமித்தம் அவர் வீட்டிற்குப் போனான். வாசலிலேயே பெரியவர் அமர்ந்திருந்தார். பார்த்ததும் வழக்கம்போல நட்போடு சிரித்தார். ஆனால், முதல்முறை பார்த்தபோது இருந்ததுபோல...
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ( 30.08.1875 – 22.01.1947 ) தமிழ் மொழி முதன் மொழிகளுள் ஒன்று என்ற நோக்கு இன்றைக்கு இருக்கிறது. முதன்மொழி என்றால், இயல்பாகத் தானே இயங்கும் வல்லமை பெற்றது; உலகின் தொடக்க மொழிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ள ஒரு மொழி என்பன போன்றவை கருதுகோள்கள். அந்தக் கருதுகோள்கள்...
36 அறைவாசிகள் காலைல எட்டறைக்குக் கெளம்பிடுவோம். சாயங்காலம் ஆறரைக்கு வந்துருவோம் என்று சொல்லி, வளையத்திலிருந்து கழற்றி ஒரு சாவியைக் கொடுத்தான், மணி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட உயரமான பையன். இவன்தான், இருக்கட்டும் சாவிக்கு என்ன இப்ப என்று மறுநாள் சாயங்காலமாகப் பெட்டியுடன் வந்தான். அவர்கள்...
35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...
ஜெர்மனில்: பீட்டர் ஹாக்ஸ் (21 March 1928 – 28 August 2003) ஆங்கிலத்தில்: ஹெலீன் ஷெர் தமிழில்: சுகுமாரன் அங்கிள் டைட்டஸ் ஓர் ஆணி வாங்குவதற்காக, ஷீவார்ஸ்வாசர் பகுதிக்கு வியாபார ரீதியாகப் பயணம் மேற்கொண்டிருந்தார். புகைவண்டி நிலையத்தில் பயணச் சீட்டுக் கொடுக்குமிடத்தில் பின்வருமாறு அச்சிட்ட வெள்ளைக்...