ஆப்பிரிக்க யூடியுபர்களின் சேனல்களிற்குப் போய்ப் பார்த்தால் தெரியும். ட்ரோரேவைக் கடவுள் என்று மட்டும்தான் அவர்கள் சொல்லவில்லை.
Tag - பிரான்ஸ்
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர் மின்வெட்டு நிகழ்ந்தது. இதனால் பக்கத்தில் உள்ள பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் சிறு தாக்கம் ஏற்பட்டாலும் அவை சில செகன்ட்களுக்குள் அதிலிருந்து மீண்டுவிட்டன...
இத்தாலியில் கடந்த வாரம் நடந்து முடிந்த G7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய காட்சிகள், ஒரு வழியாக ரஷ்ய அதிபர் புடினையும் வடகொரிய அதிபரையும் சந்திக்க வைத்திருக்கிறது. இந்த மாநாட்டில் G7 அமைப்பு நாடுகள், சட்டத்தை மீறிப் புலம் பெயர்ந்தவர்கள், பருவச்சூழல் போன்றவற்றைப் பற்றிப் பேசினாலும், முதல் நிலை...
ஒரு முட்டாளுக்கு வழிகாட்டி, சிறகுகளையும் தந்துவிட்டால், அவனது முன்னேற்றம் உறுதி. குண்டுகளில்கூட கெட்டிக்காரக் குண்டுகள், முட்டாள் குண்டுகள் என்று உண்டு. விமானத்திலிருந்து வீசப்பட்ட பின்பு எந்தக் கட்டுப்பாடுமின்றி, தன்பாட்டுக்கு நினைத்த இடத்தில விழுபவை முட்டாள் குண்டுகள். ஒரு முட்டாள் குண்டிற்கு...
16 – சுவரால் தகர்ந்த நம்பிக்கை நாள்: 9 – நவ – 1989. இடம்: கிழக்கு ஜெர்மனி. நிகழ்ச்சி: குண்டெர் ஷபாவ்ஸ்கியின் செய்தியாளர் சந்திப்பு. “பெர்லின் சுவரின் அனைத்து சோதனைச் சாவடிகள் வழியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கிடையே நிரந்தரமாக இடம்பெயர்ந்துக் கொள்ளலாம்.” என்று...
கால் பந்தாட்டத்தில் வெல்வதற்கு இனி எந்த விருதுமே மீதமில்லை என்ற நிலையில், ’பேலன் தி ஓர்’ விருதினை எட்டாவது முறையாக வென்றிருக்கிறார் லியோ. ‘பேலன் தி ஓர்’ என்பது சிறந்த கால்பந்தாட்டக்காரர்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த உயரத்தை உடனடியாக எட்டுமளவுக்கு எவரும் இல்லையென்பதிலிருந்தே இந்த...
1. 21ம் நூற்றாண்டின் இணையற்ற வில்லன் தேதி: 21-பிப்ரவரி-2022 (உக்ரைன் போருக்கு மூன்று நாட்கள் முன்னர்) இடம்: கிரெம்ளின் மாளிகை அவை: ரஷ்யப் பாதுகாப்பு சபை கைகளை வீசிக்கொண்டு துரித நடையுடன் நுழைகிறார், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பளபளவென வெள்ளைத் தூண்களுடைய அந்தப் பெரிய வட்ட அறையின் இருக்கையில்...
நைஜர், இன்று உலகத்தில் அதிகமான ஊடகங்களின் தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்த ஒரு தேசம். மிகச் சுருக்கமாய் அடையாளப்படுத்தினால் பாவப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில் ஒன்று அது. காரணம் அங்கே சனத்தொகையில் நாற்பத்து மூன்று சதவீதமானோர் வறுமையில் துவள்கிறார்கள். அதுவும் இருபது வீதமானாருக்கு ஒருவேளை சாப்பிடுவதே...
29 ஜூன் 2023 இங்கிலாந்தின் அப்பீல் கோர்ட் பிரித்தானிய அரசின் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் கொள்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. பிரதமர் ரிஷி சுனக், ‘இத்தீர்ப்புத் தவறானது. ருவாண்டா ஒரு பாதுகாப்பான நாடு. நாம் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போவோம்’ என்று அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதைத்...
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எடிட்டர் காயத்ரி ஆர், பாரிஸுக்குச் சென்றிருக்கிறார். அவர் அங்கே சென்று இறங்கியபோதுதான் பதினேழு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு போக்குவரத்துக் காவலர் சுட்டுக் கொன்றதும் தொடர்ந்து பாரிஸ் நகரமே பற்றியெரியத் தொடங்கியதும் நடந்திருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக பாரிஸ் நகரில்...












