டிரம்ப்பின் கட்டளையிடும் பாணி உண்மையில் அவரது நிலையை மேலும் பலவீனப்படுத்துகிறது. இப்போது அவரது அச்சுறுத்தல்கள் வெற்று வார்த்தைகளாக மாறிவிட்டன.
Tag - ரஷ்யா
ஜெர்மனியும் ஃபின்லாந்தும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் (1941-1944 ) இந்நகரைத் தங்கள் பிடியில் வைத்திருந்தார்கள். முற்றுகையிட்டார்களே ஒழிய கைப்பற்றவில்லை.
புதின் பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக 'ஃபர்ஸ்ட் பர்சன்' என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். அவர் யார் என்று உலக அரங்கில் எழுந்த கேள்விகளுக்கு இது முன்னுரையாக அமைந்தது.
விறுவிறுப்பான பின்னணிக் கதைகளுடன் இந்த ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் உலாவிக் கொண்டுள்ளன. மூன்றாண்டுகள் நடந்த போரே கதைதானோ என்று குழம்பிப் போயிருக்கிறது சர்வதேசச் சமூகம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புத் தொடங்கிய (24-பிப்-2022) நான்கு நாள்களில் முதல் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியது. அடுத்த இரு மாதங்கள் தொடர்ந்தும் எந்தத் தீர்வுக்கும் வரமுடியவில்லை. இருநாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்க மூன்று வருடங்களாகி இருக்கிறது. இரண்டு...
உக்ரைன் போருக்கான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மார்கோ ரூபியோவும், செர்கேய் லாவ்ரோவும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்துக்கு உக்ரைன் தரப்பு அழைக்கப்படவில்லை. அதனாலோ என்னவோ அமெரிக்காவும்...
ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல். இரண்டும் முடிந்தவுடன் ரஷ்யா உக்ரைன் போர் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின்...
‘புற்றுநோய்க்கான தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி விட்டோம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வந்து விடும். அதை நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ரஷ்யா. போலியோ, சின்னம்மை, பெரியம்மை போன்ற சென்ற நூற்றாண்டு நோய்களில் தொடங்கி சமீபத்தில்...
சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக்...











