Home » திசையெலாம் தமிழர் – 20
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 20

கண்ணன் சௌந்தரராஜன்

தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற மற்றுமொரு கணிதவியலாளர் கண்ணன் சௌந்தரராஜன். எண் கோட்பாட்டிலும் (Number Theory), பகுப்பாய்வு எண் கோட்பாட்டிலும் (Analytic Number Theory) உலகளவில் மதிக்கப்படும் இவர், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக (Anne T. and Robert M. Bass Professor of Mathematics) பணியாற்றி வருகிறார்.

சென்னையில் பிறந்த கண்ணன் சௌந்தரராஜன், பத்மா சேஷாத்ரி பள்ளியில் படித்தவர். 1987ஆம் ஆண்டை இந்தியாவில் கணித மறுமலர்ச்சி ஏற்பட்ட ஆண்டாகச் சொல்லலாம். அவ்வாண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கணித மேதை ராமானுஜனின் நூற்றாண்டு விழா, பலருக்கும் கணிதத்துறை சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர்களில் கண்ணனும் ஒருவர். ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும், அவர் எழுதிய கடிதங்களின் நகல்களும் கண்ணனுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் காரணமாகப் பள்ளிப் பருவத்திலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

அவரிடமிருந்த கணிதத் திறமையைக் கருத்தில்கொண்டு சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தை நிறுவிய அல்லாடி ராமகிருஷ்ணனைப் பள்ளி ஆசிரியர்கள் கண்ணனுக்கு அறிமுகப்படுத்தினர். அவர் மூலமாகப் பின்னாளில் அந்த நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று ஓய்வுபெற்ற பேராசிரியர் பாலசுப்ரமணியனின் அறிமுகம் கிடைத்தது. கண்ணன் சௌந்தரராஜனின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் பாலசுப்ரமணியன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!