Home » டிரம்ப்புக்கு ஒரு நோபல் பரிசு, பார்சல்!
உலகம்

டிரம்ப்புக்கு ஒரு நோபல் பரிசு, பார்சல்!

‘போரை முடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ தொலைபேசியில் டிரம்புடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்ய அதிபர் புதின் இப்படித்தான் அறிக்கையைத் தொடங்கியிருந்தார். நாமும் இப்படித் தொடங்குவதுதான் இனிவரும் நாள்களில் பாதுகாப்பானதாக இருக்கும்போல.

ஜெலன்ஸ்கியின் ஓவல் அலுவலகச் சந்திப்பு உலகத் தலைவர்களுக்கு இந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அமெரிக்க அதிபருக்கு நன்றி சொல்லித்தான் எந்த உரையையும் தொடங்க வேண்டும். இவ்வாறு நன்றி சொல்லாததில் தொடங்கி, அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்தது, அமெரிக்கா பிற்காலத்தில் என்ன ஃபீல் பண்ண வேண்டுமென்று பரிந்துரை செய்தது வரை அனைத்திற்கும் கடுமையான எதிர்வினை ஆற்றினார்கள் அமெரிக்காவின் அதிபரும், துணை அதிபரும். சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது அதிபர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப்பின் இந்தச் சந்திப்பு.

இதன் பிறகு பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார்கள். அமெரிக்கா இல்லாமல் நாம் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது என்ற உண்மையைப் புரிய வைத்திருப்பார்கள். அதனால் காலில் விழக்கூடத் தயங்காதே போன்ற அறிவுரைகள் கூட இதில் அடங்கியிருக்கலாம். வியப்பேதும் இல்லை. இதன்பின் கூட்டாக ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் தயாரானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!