Home » உக்காரைக்கு வேண்டாம் சர்க்கரை
உணவு

உக்காரைக்கு வேண்டாம் சர்க்கரை

அல்வா. நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தித்திப்பு. கையில் ஒட்டாத வழவழப்பு. திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா என எல்லா வகை அல்வாக்களுக்கும் நெய்யும் சர்க்கரையும்தான் அஸ்திவாரம். சர்க்கரை தூக்கலாகப் போட்டு நெய்யைத் தாராளமாக விட்டால்தான் வழுக்கிக்கொண்டு விழும் அல்வா பதம் கிடைக்கும்.

சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி போட்ட அல்வா கடைகளில் கிடைக்கிறது. வெல்லம் போட்ட அல்வா உண்டா? வெல்லம் போட்டு நெய்யும் குறைவாக விட்டு அல்வா போல வாயில் வழுக்கிக் கொண்டு போகும் ஒரு இனிப்பு வகை செட்டிநாட்டுச் சமையலில் உண்டு, பெயர் உக்காரை.

உக்காரை பாசிப்பருப்பை மூலப்பொருளாகக் கொண்டது. அல்வா போன்ற மென்மைக்கு ரவையும், சுவையைக் கூட்டுவதற்கு தேங்காய்த் துருவலும், சர்க்கரைக்குப் பதில் வெல்லமும் இதில் சேர்க்கப்படுகின்றன. அசோகாவையும் கேசரியையும் அல்வா பதத்தில், வெல்லத் தித்திப்பில் கலந்த ஒரு புதுச் சுவையைக் கொண்டது உக்காரை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!