16. பெரிதினும் பெரிது
அயர்விலிருந்து விழித்தெழுந்து அசையாது அமர்ந்திருந்தான். நிசியில் பாரதாய தத்தனைச் சந்தித்தது குறித்த நினைவுகளே அவன் சிந்தையெங்கும் நிறைந்திருந்தன. தனக்கு இருபது பிராயங்கள் நிறைந்தனவென்று தத்தன் அவனிடம் சொல்லியிருக்கிறான். நான் சீலனின் சிந்தையைப் பின்தொடர்ந்துகொண்டிருந்த சமயத்தில் இது நிகழ்ந்திருக்க வேண்டும்.
பாரதாய தத்தனுக்குத் தமக்கை ஒருத்தி இருந்தாள். அவளை நோய் கொண்டுபோனது. இச்சம்பவம் அவனது எட்டாவது பிராயத்தில் நடந்திருக்கிறது. பிறகு அவனது எண்ணம் முழுதும் தங்கை நிறைந்தாள். அவனுக்குத் தங்கை ஒரு சம்பத்து. அவளுக்கென்று ரத்தினக் கல் நிகர்த்த சுடர்மிகு பாசத்தைத் தனியொரு ரகசியப் பேழையில் பொதித்து மனத்தின் ஒரு மூலையில் பத்திரப்படுத்தியிருக்கிறான். அவன் இதை ஆர்வத்துடன் விவரித்துக்கொண்டிருந்தபோது சார்வாகன் குறுக்கிட்டான்.
இரு. நீ ரத்தினக் கல்லைப் பார்த்திருக்கிறாயா? என்று கேட்டான்.










Add Comment