மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் பஞ்சம் உச்சநிலையை அடைந்துள்ளது. ஏமனின் மொத்த மக்கள் தொகை நான்கு கோடி. இதில் ஒரு கோடிக்கும் மேலானோர் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக ஐ. நாவின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஹூதி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏமனின் வடக்குப் பகுதி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது.
இஸ்லாமின் ஷியா, சுன்னி என்னும் இரு பிரிவுகள் முகம்மது நபிகளுக்குப் பிறகு உருவானவை. சுன்னி பிரிவினர், குரான் மற்றும் ஹதீஸ்களை (முகம்மது நபிகளின் கூற்றுகள்) பின்பற்றுபவர்கள். ஷியா பிரிவினர், முகம்மது நபிகளின் ரத்த உறவுகளை மட்டுமே அவரின் வழித்தோன்றலாக ஏற்றுக் கொண்டவர்கள். உலகளவில் 85 சதவீத இஸ்லாமியர் சுன்னி பிரிவைச் சார்ந்தவர்கள். மத்தியக் கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் சுன்னி இஸ்லாமியத்தை கடைப்பிடிக்கின்றன. இரான், இராக், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் ஷியா இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர்.
ஏமனின் ஈசான மூலையில் அமைந்துள்ளது சாடா (Saada) நகரம். இது சவுதி அரேபியாவின் எல்லைக்கு அருகில் உள்ளது. இப்பகுதி மக்கள் சைதி (Zaydi) பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள். சைதி ஷியா, இஸ்லாமின் ஓர் உட்பிரிவாகும்.














Add Comment