சிறுவர்கள் முதல் பெரியவர் வரை, பலூனை ஊதிப்பிடித்து விளையாடாதவர் எவரும் இருக்க முடியாது..! அனைவரும் குறைந்தபட்சம் ஒரு பலூனையாவது ஊதித்தான் நம் குழந்தைப் பருவத்தைக் கடந்திருப்போம். அதுவே சூடான காற்று நிரப்பிப் பறக்க விடப்படும் பெரிய பலூன் என்றால் இன்னமும் மகிழ்ச்சி தான்!
அமெரிக்காவின், நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுர்க்கி என்ற நகரத்தில், ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் இந்த வெப்ப பலூன் பண்டிகை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை ‘அல்புகுர்கி இண்டர்நேசனல் பலூன் பீஸ்டா’ என்று அழைக்கபடுகிறது. இந்தப் பண்டிகை உருவானதற்குக் காரணம் ஒரு தனிமனிதர் என்றாம் நம்பித்தானாக வேண்டும். சித் கட்டர் (Sid Cutter) என்ற வானொலி அறிவிப்பாளர் (அ) ரேடியோ ஜாக்கிதான் காரணம். ஆம்! அவரின் பலூன்களின் மீதான ஆழ்ந்த காதல் தான் 1972-ல் ஆரம்பித்து இன்று வரை ஒரு மிகப்பெரிய விழாவாக / பண்டிகையாக ஆல்புகுர்கி நகரத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ரேடியோ ஜாக்கியாக இருந்தாலும், சித் ஒரு பலூன் ஆர்வலர்!
Add Comment