அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாக வதந்திகள் புற்றீசல்கள் போலத் தோன்றுகின்றன. குடியேற்றக் கடவுச்சீட்டுகள், பணியாளர் விசாக்கள் (h1b) எனத் தொடங்கி இப்போது மாணவர் விசாக்களுக்கு (F1) வந்திருக்கிருக்கறார்கள் வதந்தி உற்பத்தியாளர்கள்.
விவாத மேடைகளில் கமலாஹாரீஸ் மாணவர்களுக்கு க்ரீன்கார்ட் வழங்குவதற்கான பாதையை அமைப்போம் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் அதிபர் டிரம்ப், சொன்னதென்ன? கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு உடனடியாக க்ரீன்கார்ட் வழங்கப்படும் என்றல்லவா வாக்குறுதி வழங்கியிருந்தார்? அப்படி இருக்க ஏனிந்த வதந்திச் சூறாவளி?
எல்லைகளைத் தாண்டி மெக்ஸிகோ, கனடா வழியாக அத்துமீறி அமெரிக்காவில் கடவுச்சீட்டே இல்லாமல் இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றுதான் டிரம்ப் கூறியிருக்கிறார். அப்படி வாழ்பவர்களைக் கூட டிரம்ப்பின் அரசைவிட, ஒபாமாவின் அரசுதான் அதிகப்படியான அளவில் வெளியேற்றியது. ஆனால் மக்கள் உண்மையில் டிரம்ப் அரசுதான் முறையான கடவுச்சீட்டு இல்லாமல் இருப்பவர்களை வெளியேற்றும் என நம்புகிறார்கள். அப்படித் தங்கியிருப்பவர்களில் பலர், தாங்களாகவே வெளியேற முயன்று கொண்டிருக்கிறார்கள். இதில் மாணவ கடவுச்சீட்டில் முறையாக வந்து பயில்வோர் அச்சம் கொள்ள அவசியம் என்ன?
Add Comment