நிறவெறிக்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிற மக்கள் தங்களுக்கான வீடு கேட்டு அரசாங்கத்துக்கு மனுச் செய்து முப்பதாண்டுகள் கடந்தும் இன்னும் கிடைக்கப் பெறாமல் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம்… நிறவெறிச் சட்டம்.
இதற்கெல்லாம் சட்டமா? ஆம். தென்னாப்பிரிக்கா இன்னும் மாறவில்லை. 1948-ம் ஆண்டுக்கு முன்பு தென்னாப்பிரிக்க அரசியலின் உயிர்நாடியாக இருந்தது ஒரே விஷயம்தான்- கறுப்பின வெறுப்பு. அந்நாளில் அரசியல்வாதி தொடங்கி அடிமட்டத் தொண்டன் வரையில் வெள்ளைநிற ஆப்ரிக்கர்களே ஆக்ரமித்திருந்தார்கள். அவர்கள் ஆப்ரிக்கன் (Afrikkan) எனத் தம்மை அழைத்துக் கொண்டார்கள். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கறுப்பினத்தவரைத் தாழ்த்த அப்போது உருவாக்கப்பட்டதுதான் நிறவெறிச் சட்டம்.
இதன்படி கறுப்பினத்தவர்கள் தாங்கள் விரும்பும் ஊர்களில் வசிக்க இயலாது. தங்கள் பிள்ளைகளை விரும்பிய பள்ளிகளுக்கு அனுப்பும் வசதிகள் கிடையாது. வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் வெள்ளையின மக்களை விடத் தாழ்ந்த நிலையில்தான் அவர்கள் இருந்தாக வேண்டும். இதுதான் அப்பார்த்தெட் சட்டத்தின் சாரம்.
Add Comment