தின்பண்டத்தின் பெயரால், அதைச் சிறப்பிக்கவே ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது ஹாங்காங்கில். ’ஏன், நம்ம ஊர்ல பொங்கலுக்குத் திருவிழா எடுக்கறதில்லையா..?’ என்று உங்கள் மனக்குரல் கேட்கிறது. இந்த ‘பன்’ திருவிழா அதைவிடப் பல வகைகளிலும் வித்தியாசமானது. ஹாங்காங்கில் அமைந்துள்ள Cheung Sha என்கிற தீவில்...
Author - பூவராகன்
உலகவாசிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ஒன்று என்றால், சீனர்களுக்கு மட்டும் அது இல்லை. ஏனென்றால் சீனர்களின் ஆண்டு 354 நாட்கள் கொண்டது. நம்மவர்கள் நட்சத்திரப்படி பிறந்ததினம் கொண்டாடுவதைப் போல, சீனர்களுக்குப் புத்தாண்டு தினமானது ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி நடுவில் ஏதோ ஒரு தினம்...
ஒரு மனிதர்… மனிதர் என்றால் சாதாரண மனிதரல்ல.. சீன அதிபராக இருந்தவர் எந்த முறையில் மரணமடைந்தார் என்பதை அறிவிக்கப் பதினொரு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது சீன அரசுக்கு. அந்த மனிதரின் பெயர் ஜியாங் ஜெமின் (Jiang Jemin). பதினொரு ஆண்டுகளுக்கு முன் அவர் மரணமடைந்த சமயம், இதய நோயால் இறந்தார் என்றொரு...
நாமனைவரும் மறந்தேவிட்ட கோவிட் இன்னமும்கூடச் சில இடங்களில் மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. ஆமாம் – மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் இந்தப் பெயர் வெளியேவர ஆரம்பத்துவிட்டது, சீனாவின் ஊஹான், மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில். கடந்த மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின்...
நவராத்திரிக்கு வைத்துத் தரும் ஜாக்கெட் பிட்டில் தொடங்கி, பண்டிகைக் கால இனிப்பு வகைகள் வரையில் மற்றவர்கள் நமக்கும், நாம் மற்றவர்களுக்கும் பரிசுகளைக் கடத்துவது என்றென்றும் முடியாத ஒரு தொடர்கதைதான். பண்டிகைத் தின்பண்டங்களை அவர்கள் கொடுத்தனுப்பிய அதே டப்பாவில் பதில் மரியாதையாக நம் வீட்டு இனிப்புகளை...
முன்பெல்லாம் மாரத்தான் என்றால் மிகச் சில வீரர்கள் கலந்துகொள்ளும் ஒரு பந்தயம். இன்று உடல் நலனில் அக்கறை உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் முழு மாரத்தான், அரை மாரத்தான் என்று வாரம் தோறும் ஓடுகிறார்கள். உலகமெங்கும் இது நடக்கிறது. ஆனால் மாரத்தான் ஓடுவது அவ்வளவு எளிதல்ல. தம் கட்டி மணிக் கணக்கில் ஓடுவதற்கு உடல்...
தைவான், சீனாவின் ஓடுகாலிப் பிரதேசம். சீனா அதை எப்போதும் பிடித்து இழுத்துத் தன்னுடன் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். இம்முறை அது நடந்துவிடும். எச்சரிக்கை. வருடந்தோறும் சீனாவின் தேசிய நாளான அக்டோபர் ஒன்றாம் தேதி இப்படியொரு வதந்தி அல்லது கவலை தைவானில் வலம் வருவது வழக்கம். ஆனால் பெரிதாக ஏதும்...
ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. வளர்ச்சி எப்படி இருக்கிறது? பிரிட்டிஷார் பிடித்து வைத்திருந்த ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த நாள் ஜூலை ஒன்றாம் தேதி. அன்றைய தினம் ஹாங்காங்கிற்குப் பொது விடுமுறை. அதுவும் சீனாவுடன் ஹாங்காங் இணைந்து இந்த வருடத்தோடு இருபத்தைந்து...
சீனா, ஹாங்காங், வியட்நாம், கொரியாவைச் சேர்ந்தவர்கள் பாம்பு, பல்லி, அரணை, பூரான், தேள், கரப்பான் பூச்சி என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள் என்பது உலகறிந்த ரகசியம். இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் பிராந்தியத்தில் சுறா துடுப்பு சூப் (Shark fin Soup) என்று ஒரு ரகம் சக்கைப் போடு போடுகிறது. இந்த...
கொரோனா வைரஸின் தாயகமான சைனா இன்று மீண்டும் அதன் கோரத் தாண்டவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சைனாவின் கோவிட் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது. மீண்டும் ஒரு கோவிட் அலை வரலாம், மாஸ்க் அணியாவிட்டால் ஐந்நூறு ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது...