Home » Archives for ஸஃபார் அஹ்மத்

Author - ஸஃபார் அஹ்மத்

Avatar photo

உலகம்

இலங்கை: இறுகி வரும் போதை வளையம்

ஒன்றல்ல, இரண்டல்ல, ஐம்பதாயிரம் கிலோ ஐஸ் என்னும் போதைப் பொருளைத் தயாரிக்கும் ரசாயன மாதிரிகள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் பாதுகாப்புப் பிரிவில் வேலை செய்த போலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டு முற்றத்தில் இருந்து மீட்கப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா? இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களின் குட்டு...

Read More
உலகம்

அநுரவின் ஓராண்டு: சாதனைகளும் தடுமாற்றங்களும்

அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற இலங்கை ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து சரியாய் ஓராண்டாகின்றது. நிறைய பிளஸ்களும், ஒரு சில தடுமாற்றங்களுமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது ஆட்சி. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர வென்றபோது, எந்தவிதப் பிரபுத்துவப்...

Read More
உலகம்

அகதிகளான அதிபர்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியத்தைத் தவிர அத்தனை சிறப்புச் சலுகைகளையும் பறிக்கும் வரலாற்றுச் சிறப்புமிகு சட்ட வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ‘முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ஒழிப்பு’ என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு...

Read More
உலகம்

ரணில்: அதிர்ச்சி வைத்தியக் கைது

பொதுநிதியைத் தன் தனிப்பட்ட லண்டன் பயணத்திற்குப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சிஐடியால் ஆகஸ்ட் 22ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இலங்கையின் சரித்திரத்தில் முதன்முறையாக நடைபெறும் ஒரு அரசத் தலைவரின்...

Read More
உலகம்

மீண்டும் ரணமாகும் தழும்புகள்

யாழ்ப்பாணத்தில் செம்மணி என்ற இடத்தில் கடந்த முப்பத்திரண்டு நாட்களுக்கு மேலாகத் தோண்டப்பட்டு வந்த மனிதப் புதைகுழிகளில் இருந்து நூற்று நாற்பத்து ஏழு மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், இந்தப் பணிகள் கடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதி தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றின் அறிக்கைகள் யாழ்ப்பாண...

Read More
உலகம்

இப்ராஹீம் ட்ரோரே: புரட்சி செய்து பிறந்த ‘கடவுள்’

ஆப்பிரிக்க யூடியுபர்களின் சேனல்களிற்குப் போய்ப் பார்த்தால் தெரியும். ட்ரோரேவைக் கடவுள் என்று மட்டும்தான் அவர்கள் சொல்லவில்லை.

Read More
உலகம்

அநுரவின் சட்டை பட்டன்

அநுரகுமார திஸாநாயக்க, சகல அதிகாரமும் அமையப் பெற்ற ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்து எட்டு மாதங்களும், அவரது ஜே.வி.பி கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அதீதப் பலத்துடன் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுமாகின்றன. ஊழல் ஒழிப்பு, வீண் விரயமில்லாத சிக்கனமான நிர்வாகம்...

Read More
உலகம்

‘அதானி வேறு; இந்தியா வேறு’ – அநுரவின் அசகாய அரசியல்

காற்றாலை மின்சார அதிபதியாய் பெரும் தடபுடலாய் முதலீடு செய்ய முனைந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, திடீரென்று இலங்கைக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய ராஜபக்சே அரசு, அதானிக்கு இலங்கையின் வடபகுதியான மன்னார் மாவட்டத்தில்...

Read More
உலகம்

உலராத உதிரமும் புலராத பொழுதும்

கனடா, கிரீன்லாந்து, பனாமா, காஸா என்று அனைத்திற்கும் ஆசைப்படும் டிரம்புக்கு, பலஸ்தீன் என்ற சரித்திர பூமியின் பின்புலம் அவசியமில்லாத ஒன்று. இந்த உலகத்தில் நடந்த மிகப் பெரும் நில அபகரிப்பின் வலிகளும், போராட்டங்களும் தேவையில்லாத ஒன்று. வரலாறு நெடுகிலும் நடந்த யுத்தங்களும், பலியான லட்சக்கணக்கான...

Read More
உலகம்

இலங்கை: அடங்கியிருக்கும் இனவாதம்

நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!