நவம்பர் பத்தாம் தேதி நடந்த மொரிசியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நவீன் ராம் கூலம் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு முன்பு 2005 – 2014 வருடங்களில் இவர் அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். நவீன் ராம் கூலத்தின் முன்னோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகாரிலிருந்து பணியாளர்களாக மொரிசியஸ்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
கடந்த வாரம் கயானாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஓமர் கான் இந்தியா வந்திருந்தார். நம் பாதுகாப்புப் படைத்தளபதி அனில் சௌகானை சந்தித்து இரு நாட்டினிடையே ராணுவம், பாதுகாப்பு என உரையாடல்களால் உறவை மேம்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அடுத்த சில நாள்களில் இந்தியப் பிரதமர் அங்கு செல்லும் திட்டம் இருபதால்...
காஷ்மீரில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 49 இடங்களை கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஓமர் அப்துல்லா முதல் அமைச்சர். காஷ்மீரில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகான தேர்தல் இது. அதுவும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லாடக் என இரண்டு...
தனிமை, சமூகப் பிரச்சனையாகியுள்ளது தென்கொரியாவில். உலகிலேயே அதிக அளவில் தற்கொலைகள் நிகழும் நாடுகளில் தென்கொரியா முக்கியமானது. உலக அளவில் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டவர்களும் இவர்கள் தான். அந்நாட்டின் தற்போதைய சிக்கலைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு புள்ளிவிவரங்களே போதுமானது. தென் கொரியா...
பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தைச் சுற்றி ஓராயிரம் கேள்விகள் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளப் பங்குச் சந்தையில் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனை டப்பா ட்ரேடிங் என்கிறார்கள். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல், முறையாக பதிவுசெய்யப்படாமல் இயங்கும் பங்குப் பரிவர்த்தனை முறை. இதன் மூலம் நாள்...
போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர் வடகொரியா ஓனர் கிம் ஜாங் உன். போர் என்று எதையும் தொடங்கும் திட்டம் இல்லையெனினும், எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்கிற காட்சியை உருவாக்கி...
டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சோனம் வாங்சுக் அறிவித்திருக்கிறார். ‘ஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்துறை அமைச்சர் மூவரில் யாரையாவது சந்திக்க வேண்டும். எங்கள் தேவைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். நேரம் ஒதுக்குங்கள்.’ என்கிறார். சோனம் வாங்சுக் என்ற பெயர் பலருக்கும் பரிச்சயமாகாமல் இருக்கலாம்...
‘அலுவலக்திற்கு வர வேண்டுமாம். அதுவும் வாரத்தில் ஐந்து நாள்களுக்கு. அநியாயம்.’ அமேசான் பணியாளர்களின் ஒருமித்த குமுறல் இதுதான். சென்ற வாரம் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆன்டி ஜெஸ்ஸி தனது அலுவலகச் சொந்தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நீண்ட நெடும் கடிதத்தின் சாரம் இதுதான். வரும்...
சும்மாவே இருந்து லட்ச லட்சமாகப் பணம் சம்பாதிக்கிறார் ஒருவர். பெயர் சோஜி மொரிமோட்டோ. ஜப்பானைச் சேர்ந்தவர். 38 வயதான இவர், ஆண்டுக்கு அறுபது லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதித்து வருகிறார். ஆம். எதுவும் செய்யாமல் இருப்பதற்குத் தான், வாடிக்கையாளர்கள் இவருக்குப் பணம் தருகிறார்கள். சங்கதி இதுதான்...
சமீபத்தில் ஊடகங்களில், பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அது அவர்களது கடல் பகுதிகளில் அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் இருக்கலாம் என்கிற அறிவிப்பு. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த ஆய்வின் முடிவில், உலகளவில் நான்காவது பெரிய...