Home » மோதி விளையாடு!
உலகம்

மோதி விளையாடு!

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மீண்டும் போர் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கம்போடியாவின் போய்பெட் பகுதியில் கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து இரண்டு குண்டுகளை வீசியது. இது குறித்துப் பேசியுள்ள தாய்லாந்து விமானப்படை செய்தித்தொடர்பு அதிகாரி, கம்போடியா BM 21- ரக ஏவுகணைகளைப் பதுக்கிவைத்திருந்த இடத்தைக் குறிவைத்தோம் என்றும், பொது மக்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிலும் எல்லையோரக் கிராமங்களில் பல நூறு கிலோமீட்டர்களுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்படுவது கடந்த ஐந்து மாதங்களில் இது இரண்டாம் முறை. தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்கள், மீண்டும் தங்களது இருப்பிடத்துக்கு எப்போது பத்திரமாகத் திரும்புவோம் என்று தெரியாமல் காத்திருக்கின்றனர்.

ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த வாரம் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். ஜூலையில் நடைபெற்ற ஐந்து நாள் சண்டையை மலேசியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. அடுத்த சில மாதங்களில் சண்டை நிறுத்தம் மீறப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!