Home » Archives for ராஜ்ஶ்ரீ செல்வராஜ் » Page 14

Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

Avatar photo

உணவு

மன அழுத்தமும் மிகு உணவும்

மன அழுத்தம்தான் இன்றைக்கு மக்களின் பெரும் பிரச்னை. அது வருவதற்கு எத்தனையோ காரணங்கள். வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என்று எங்காவது ஏதாவது வடிவில் வருகிற ஒரு சிறு பிரச்னைகூட பூதாகாரமாகி மனத்தைக் கவ்வி, சோர்வடைய வைத்துவிடும். அப்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இஷ்டத்துக்குச் சாப்பிடத்...

Read More
வென்ற கதை

இறங்கி அடித்தால் வெற்றி நிச்சயம்!

கோவை, பஞ்சாலைகளுக்குப் புகழ் பெற்ற நகரம். இப்படிச் சொல்லி விடுவது எளிது. ஆனால் தரமான பஞ்சை இனம் காண்பது எளிதல்ல. பஞ்சின் நீளம் எவ்வளவு? அது நன்றாக விளைந்துள்ளதா? பலம், தடிமன் சரியான அளவில் உள்ளதா? அந்தப் பஞ்சின் வியர்வை உறிஞ்சும் தன்மை எந்த அளவில் இருக்கிறது? ஆடை நெய்யும் தரம் உள்ளதா? இந்தப்...

Read More
வென்ற கதை

கண்ணில் பட்டுக்கொண்டே இருங்கள்!

கல்லூரி நண்பர்கள் சிலர், ஒரு மருந்து கம்பெனிக்கு இண்டர்வியூ சென்றார்கள். சும்மாதானே இருக்கே. நீயும் கூட வாவென அந்த இளைஞனை உடன் அழைத்தார்கள். அவனும் சென்றான். வர்றது வர்றே. நீயும் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணலாமே என்றார்கள். அவர்கள் சொன்னதற்காக இண்டர்வியூவும் அட்டெண்ட் செய்தான். இறுதியில் நண்பர்களுக்கு...

Read More
நுட்பம்

செயல் புலிகளும் செயலிகளும்

நல்லவர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார். தேவையான அனைத்துப் பொருள்களையும் எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு நேரே வெளியே வந்துவிடுகிறார். பில் கவுண்ட்டர் பக்கம் போகவில்லை. பணமும் செலுத்தவில்லை. நடப்பது இங்கல்ல. அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில். உடனே நமக்கு...

Read More
வென்ற கதை

‘என் கனவு, என் கிராமம், என் மக்கள்…’

அந்த மாணவனுக்குக் கணினி அறிவியல் மிகவும் இஷ்டம். ஆனால் கணக்கு வராது. ஆங்கிலம் அடியோடு வராது. ப்ளஸ் டூவில் அவன் சேரும்போது கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடத்தோடு சேர்ந்ததுதான் கணினி அறிவியல் பாடப் பிரிவு (Computer science group). ஆனாலும் கணினி படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கை. கணினிப் பாடப் பிரிவைக்...

Read More
தொலைக்காட்சித் தொடர்கள்

“ஒப்பாரிகள் ஒழிந்தால் உட்கார்ந்து பார்க்க நாங்க ரெடி!”

தொலைக்காட்சித் தொடர்கள் இல்லத்தரசிகளுக்கானது. கல்லூரிப் பெண்கள் சீரியல் பார்ப்பதில்லை. இப்படியொரு பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அது எந்த அளவில் உண்மை? பக்கத்து வீட்டுக்காரி ஓசியில் ஒரு சிட்டிகை காபித்தூள் கேட்கிற மாதிரிதான் ஆஷிகாவிடம் கேட்டோம். அவர் 2k கிட். கல்லூரி மாணவி...

Read More
ஆன்லைன் வர்த்தகம்

எப்படி நடக்கிறது இணைய வர்த்தகம்?

ஆன்லைன் விற்பனை என்பது, பெரும்பாலும் மொபைல் செயலிகள் மூலம்தான் நடக்கின்றது. செயலிகளை உருவாக்குபவர்களும் மக்களின் வேகத்திற்கும் தேவைக்கும் தகுந்தாற் போல் புதுசு புதுசாக வசதிகளைச் சொருகிக்கொண்டே இருக்கிறார்கள். திறமை, படைப்பாற்றல், திட்டமிடல், கவனம் சிதறாத உழைப்பு போன்றவையே நவீன தொழில் துறையை வழி...

Read More
வென்ற கதை

‘பாத்திரங்களுக்கு உயிர் இருக்கிறது…’

டிகிரி காப்பி எந்தளவுக்குப் புகழ் பெற்றதோ, அதே அளவுக்கு அது தரப்படும் பித்தளை டபரா தம்ளரும் புகழ் மிக்கதுதான். இந்த இரண்டுமே கும்பகோணத்தின் அடையாளங்களுள் முக்கியமானவை. காப்பியைப் பிறகு பார்க்கலாம். அந்தப் பித்தளைப் பாத்திரங்களை இப்போது பார்ப்போம். காப்பி தம்ளர் மட்டுமல்ல. இதர அனைத்து விதப்...

Read More
வென்ற கதை

தமிழ், வாழ வைக்கும்!

உலகில் உள்ள பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களில் சொற்பொழிவாற்றி இருக்கும் ஒரே தமிழ்ப் பேச்சாளர் என்றால் அது சுமதிஶ்ரீதான். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எல்லோரும் செல்லும் இடங்களைச் சுற்றி வந்து சொற்பொழிவாற்றுவதில் ஒன்றுமில்லை. ஜாம்பியா, உகாண்டா என்று நாம் மேப்பில் மட்டும் பார்த்திருக்கக் கூடிய...

Read More
வென்ற கதை

சாயலற்றவன்

பல கோடிகளில் பொருள் செலவு. புகழ்பெற்ற கதாநாயகன், கதாநாயகி. பிரபல தொழில் நுட்பக் கலைஞர்கள். மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பு. உலகெங்கும் உள்ள தியேட்டர்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ். வெளியான இரண்டாவது நாளே வெற்றி அறிவிப்பு. இதுதான் வெகுஜன தமிழ் சினிமாவின் வெற்றியைச் சொல்ல இன்று கடைப்பிடிக்கப்படுகிற நடைமுறை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!