இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும் ஒரு ஃபோட்டோ வைரலானது. அது ஏன், நீச்சல் தடாக ஃபோடோவிற்கு இத்தனை மகிமை..?
உண்மையில் இந்த நீச்சல் தடாக கசமுசாவின் பூர்வீகம் இலங்கை ஜனாதிபதி மாளிகை. இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தப்பியோடிய போது மாளிகைக்குள் புகுந்த மக்கள் தமக்கு இஷ்டப்பட்டதையெல்லாம் செய்தனர். விதவிதமான கோணங்களில் ஃபோஸ் கொடுத்தனர். இந்தப் படங்களைத் தேடிப்பிடித்து எடுத்த பங்களாதேஷ் மாணவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்கள், இதுபோல பிரதமர் ஷேக் ஹசீனாவின் நீச்சல் தடாகத்திலும் நீந்த ஆர்வமாய் இருப்பதாக எச்சரிக்கை ஊட்டி இருந்தன.
சந்தேகமே இல்லை. இடது ஒதுக்கீட்டுப் போராட்டம், படிப்படியாய்ப் பரிணாமம் பெற்று புரட்சியாய் உருமாறி தேசத்தின் கட்டமைப்பை மொத்தமாய்க் காவு கொண்டு இருக்கிறது.
Add Comment