Home » வங்கக்கடலில் முத்தெடுக்கும் சீனா
உலகம்

வங்கக்கடலில் முத்தெடுக்கும் சீனா

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் சீன அதிகாரி

வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டார். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக எது நடந்தாலும் அது இந்தியாவில் எதிரொலிக்கும். நல்லதோ கெட்டதோ அதிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியாவுக்கு அது புரிகிறதோ இல்லையோ, சீனாவுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கிறது. சீனத் தூதுவர் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தினரைச் சந்தித்தது அதைத்தான் சுட்டுகிறது.

ஆட்சி மாற்றம் நடந்து புதிதாக யார் வந்தாலும் மற்ற நாடுகளின் தூதரக அதிகாரிகள் சந்திப்பதும் வாழ்த்துச் சொல்வதும் இயல்புதான். வங்காளதேசத்தில் இடைக்காலத் தலைமைப் பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸை இந்தியத் தூதரும் சந்தித்தார். இந்திய வங்கதேச நட்பைத் தொடர வலியுறுத்தினார். உதவிகள் வழங்கி உறுதுணையாக இந்தியா இருக்கும் என்று நம்பிக்கையளித்தார்.

சீனத் தூதரும் இதைச் சொல்லத்தான் வந்தார். ஆனால், இதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிளம்பிப்போகும் வழியில் ஜமாத்-இ-இஸ்லாமி அலுவலகத்தில் வண்டியை நிறுத்தினார். “ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு கட்டுக்கோப்பான அமைப்பு” என்று வாழ்த்துப்பா ஒன்றும் பாடினார். யூனுஸிடம் சொன்னதைப் போலவே ‘எங்கள் நாட்டின் நட்பும் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு’ என இங்கும் நட்பு பாராட்டினார்.

இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அடையாளம் காணப்படுகிறது. பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்தில் தொடங்கப்பட்டது. எழுபதுகளில் வங்காளதேச விடுதலைப் போராட்டங்களுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டது இந்த அமைப்பு. எனவே நாட்டுக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டு இவர்கள் மேல் உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!