கணினி ஓர் அத்தியாவசியப் பொருள். நமக்கு நம் உடம்பு எப்படியோ அப்படி நம் வாழ்க்கைக்குக் கணினி. ஆனால் நம்மைப் பராமரிப்பது போல நம் கம்ப்யூட்டர்களை நாம் பராமரிக்கிறோமா? மேலுக்குப் போட்டு வைக்கும் தூசு தும்புகள், அழுக்கு-கறைகள் ஒரு பக்கம் என்றால் உள்ளே குவித்து வைக்கும் குப்பைகள் மறுபக்கம். அம்மாதிரி கம்ப்யூட்டர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு கம்ப்யூட்டர் டாக்டராக எனக்கு ரத்தக் கண்ணீர் வரும்.
‘இண்டர்நெட் உபயோகப்படுத்துகிறீர்கள். ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் (antivirus software) போடாமல் இருக்கிறீர்களே?’ என்று கேட்டால், சார் ‘அந்த’ சைட்டுக்கு எல்லாம் நான் போகவே மாட்டேன். வெறும் youtube பார்ப்பேன். மெயில் செக் பண்ணுவேன். அதனால் எனக்கு அது தேவைப்படாது!’என்பார்கள். மயக்கமடையாமல் இருக்க நான் அப்போதெல்லாம் பாடுபட வேண்டி இருக்கும்.
இவர்களுக்கெல்லாம் Ransomeware தாக்குதல் பற்றிச் சொல்லி எப்படிப் புரிய வைப்பது? சிக்கல், பெரும் சிக்கல்.
சிறப்பான எளிய வழிகாட்டுதல். பலமுறை நானே எனது கணினியை சரி செய்து இருக்கிறேன். இது போன்ற குறிப்புகள் மூலமாகத்தான். இது மிகவும் உதவிகரமானது. இதை ஒரு புத்தகமாக தரலாமே
அன்புடன்
செந்தூரம் ஜெகதீஷ்