Home » எத்தனை தலைகள்? எவ்வளவு உருப்படி?
சமூகம் வெள்ளித்திரை

எத்தனை தலைகள்? எவ்வளவு உருப்படி?

திரையரங்குக்குச் சென்று, பெரிய திரையில் பார்த்தால்தான் படம் பார்த்த திருப்தி என்கிற கருத்தை, ‘மாற்றுக் கருத்தா’க்கிய பெருமை ஓடிடிக்கு உண்டு. பெருமையில் பாதியை அது கோவிட் 19க்குக் கொடுத்துவிட வேண்டும் என்ற போதிலும் மக்கள் மத்தியில் இது இன்று உண்டாக்கி இருக்கும் தாக்கம் சிறிதல்ல.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும் சரி, எவ்வளவு சிறிய அவகாசம் கிடைத்தாலும் சரி. ஒரு ஸ்மார்ட் போனும் நான்கு அல்லது ஐந்து ஜி கனெக்‌ஷனும் உரிய ஓடிடி சந்தாவும் இருந்தால் போதும். திருப்தியான பொழுதுபோக்கு உத்தரவாதம் என்பதே இதன் மிகப்பெரிய வெற்றிக்கு முதல் காரணம். அமேசான் ப்ரைம், நெட் ப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் முக்கியச் சந்தையாக இன்று இந்தியா இருந்து வருகிறது. சன் நெக்ஸ்ட், ஜீ5, ஆஹா உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் களத்தில் உள்ளன. இவற்றுள் மிக அதிக சந்தாதாரர்களைக் கொண்ட ஓடிடி, ஹாட் ஸ்டார். நாற்பத்து ஆறு மில்லியன் பேர். அடுத்து அமேசான் ப்ரைம் பத்தொன்பது மில்லியன். நெட்ப்ளிக்ஸ் ஐந்து மில்லியன். இது இந்தியாவில் மட்டும். உலகம் முழுதும் கணக்கெடுத்தால் நெட் ப்ளிக்ஸ் மேலே வந்துவிடும்.

தமிழ்ச் சூழலுக்கு வருவோம். சினிமா இன்று முன்பு போல இல்லை. பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிக்கொண்டுதான் உள்ளார்கள் என்றாலும் புதியவர்கள் வாய்ப்புப் பெறுவது கனவாகிக் கொண்டிருக்கும் காலம் இது. கோவிடுக்கு முன்பே இச்சூழல் வர ஆரம்பித்துவிட்டது என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை மிகவும் மோசம் என்றே கோடம்பாக்கத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் சொல்கிறார்கள். அப்படியும் விடாமல் முட்டி மோதி ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிடத் தயாரானாலும் ஒரு நாள், இரண்டு நாள் ஓடுவதே அரிது என்றாகிவிட்ட காலத்தில் ஓடிடி தளங்கள் புதிய இயக்குநர்களுக்குப் பெரிய கதவைத் திறந்து வைக்கின்றன…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • எதை பார்ப்பது என்று திகைப்பாகத் தான் உள்ளது.தொடர்ந்து பார்த்தால் கண்வலி உறுதி.சில வெப்சீரிஸ் விமர்சனங்களை படித்தும் பார்க்கலாமோ என தோன்றுகிறது.இதுவும் புளித்து போகும் காலம் வரும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!