6. உடையும் அரேபியக் கனவு
முதல் உலகப்போரில் வெற்றி பெற்ற நாடுகள், பாரீஸில் நடந்த. அமைதி மாநாட்டில் கூடின. பிரிட்டன், ஃபிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகள் முக்கியப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்டனர். கூட்டாளியானதால் ஃபைசலும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் முடிவெடுக்கும் அதிகாரங்கள் எதுவும் அவருக்குக் கிடையாது.
ஃபைசல் தன் தரப்பு நியாயங்களை முன்வைத்தார். போரில் அரேபியப் படைகளின் பங்களிப்பு, பிரிட்டனின் வாக்குறுதி, அரேபிய தேசியவாதம் எனப் பலவற்றையும் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சனும் ஃபைசலுக்கு ஆதரவாகப் பேசினார். சிரியாவை அரேபியர்கள் ஆள வேண்டியதன் தேவையை விளக்கினார்.
ஆனால் பிரிட்டனும் ஃபிரான்ஸும் அதையெல்லாம் கேட்பதாக இல்லை. சிரியா, லெபனான் பகுதிகள் இனி தங்கள் அதிகாரத்துக்குள் வரும் என அழுத்தமாகச் சொன்னது ஃபிரான்ஸ்.











Add Comment