முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) என்பது தற்போது பொதுவாகப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து இதில் என்ன புரட்சி செய்யலாம்? முப்பரிமாணத்தை நான்கு பரிமாணமாக்க முடியுமா?. பொதுவாக நான்காவது பரிமாணம் எந்று சொல்லும் போது அது காலத்தையே குறிக்கும். அதாவது அச்சு இயந்திரத்திலிருந்து வெளியே வரும் பொருள் காலத்தோடு சேர்ந்து மாற்றமடையக் கூடியதாக இருந்தால் அதனை நாம் 4D Printing என்று சொல்லலாமல்லவா.? இதற்கு வெளிப்புறத் தூண்டுதல்களால் உருமாறும் திறன் கொண்ட மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். எவ்விதத் தூண்டுதல்களும் இல்லாமல் பொருட்களின் உருவங்களில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை.
காலம் என்னும் நான்காவது பரிமாணத்தில் உருமாறும் பொருளாக இருந்தாலும் அந்த உரு மாற்றத்துக்கான தூண்டுதலைக் கொடுக்கக் கூடியதாக எதுவும் இருக்கலாம். உதாரணமாக வெப்பம், மின்சாரம், ஒளி அல்லது உயிரியல் மாற்றங்கள் போன்ற காரணிகள் உருமாற்றத்திற்கான தூண்டுகோலாக இருக்கலாம். அச்சிடப்படும் பொருளின் மூலப் பொருள் ஒரு பிரத்தியேகப் பயன்பாட்டுக்காகவே அச்சிடப்படுகிறது. அதற்கு எந்த வெளிப்புறத் தூண்டுகோல் தேவையோ அதற்கேற்ற மூலப்பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.
இத்தொழில்நுட்பம் பலதுறைகளிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ள ஒருசில பயன்பாடுகளைப் பார்ப்போம்.
Add Comment