அதிகாலைக்குச் சற்று முன்னதான நேரம். இரவு முழுவதும் அந்தப் புனித ஸ்தலத்தில் தொழுது பிரார்த்தனை புரிந்திருந்த மக்கள், நோன்பு பிடிப்பதற்காக ஸஹர் உணவை உட்கொள்ளத் தயாராகக் காத்திருக்கின்றனர். ‘பள்ளிவாசலில் தரித்திருத்தல்’ என்பது ரமளான் மாதத்தில் இஸ்லாமியர்களின் ஒரு வழிபாட்டு வடிவமாகும். ‘இஃதிகாப்’ எனப்படும் இந்த வணக்கத்தில் அன்றைய தினம் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென,மசூதியின் கூரைக்குப் பக்கத்திலிருக்கும் ஜன்னல்கள் ஆடி அசைகின்றன. கண்ணாடிகள் தெறித்து உடைகின்றன. கண்ணீர்க் குண்டுகளும், க்ரனேட் கோளங்களும் தொப்பென்று வந்து நடுவில் விழுந்து வெடிக்க, குழந்தைகள் அதிர்ச்சியில் வீறிட்டு அழ ஆரம்பிக்கின்றன. வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களை, ஆயுதங்களுடன் தாக்கும் மிலேச்சத்தனமான அந்த இழிசெயல் நிறைவேறுகிறது. இஸ்ரேலியப் படையினர்..! திபுதிபுவென உள்நுழைந்து, தமது வீரத்தைப் பரீட்சித்துப் பார்க்கின்றனர். இளையவர்களின் முகங்களைத் தரையோடு நசுக்கித் தரதர வென்று இழுத்துச் செல்கின்றனர்.
Add Comment