Home » காசி @ சென்னை 600033
ஆன்மிகம்

காசி @ சென்னை 600033

மாம்பலம் காசி விசுவநாதர் ஆலயம்

இந்து சமய அறநிலையத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீயாக வேலை செய்திருக்கிறார்கள். நெடுங்காலமாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆலயங்களை எல்லாம் புனரமைத்துக் குடமுழுக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுக்கு ஆயிரமாவது ஆலயம், மேற்கு  மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில். கடந்த பல மாதங்களாகத்  திருப்பணி வேலைகள் வேகமாக நடந்திருக்கின்றன.  விடிந்தால் கும்பாபிஷேகம் என்ற நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றோம்.

நாநூறு ஆண்டுகள் பழமையான கோயில் இது. இக்கோயிலை ‘மகா பில்வ க்ஷேத்திரம்’ என்றும் அழைக்கிறார்கள். அதாவது மகா வில்வ மரங்கள் இருந்த தலம் இது. காலப்போக்கில் மகா வில்வ என்பது மா வில் ஆகியிருக்கிறது. காலத்தில் இன்னும் கரைந்து தற்போதைய மாம்பலம் ஆகியிருக்கிறது. அதாவது மயிலைக்கு மேற்கே உள்ள அம்பலம் இது. எனவே மேற்கு மா அம்பலம் என்பது மேற்கு மாம்பலம் ஆகியிருக்கிறது.

ஆக, மாம்பலத்துக்கு அப்பெயரைக் கொடுத்ததே இந்தக் கோயிலின் ஈசன் தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அருமையான தகவல்கள். என்னுடைய 5 முதல் 15 வயதுவரை இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் தெரு , குப்பையா செட்டி தெரு, ராமகிருஷ்ணாபுரம் தெரு நாட்களில் அடிக்கடி சென்ற கோயில்.
    பல கச்சேரிகள் , திருப்பாவை திருவெம்பாவை என்று சென்ற இடம். கோ சாலை துவங்க சங்கராச்சாரி வந்த நினைவு கூட இருக்கு .

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!