விஷத்தினும் கொடியது பயம்!
கீதா மட்டும்தான் அந்த நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கினாள். வெறிச்சென்றிருந்தது. அங்கிருந்து பத்துநிமிட நடையில் அவளது வீடு. எப்போதும் எட்டு மணியாகிவிடும். ஆனால் இன்றைக்கு ஐந்தரை மணிக்கே வந்துவிட்டாள். மாலை வெயிலைப் பார்ப்பதே அவளுக்குப் புதிதாக இருந்தது.
தனியார் கல்லூரியொன்றில் அக்கவுண்டண்ட் வேலை. இன்னதென்று இல்லாமல் எல்லா விதமான வேலைகளும் செய்யவேண்டியிருந்தது. தினமும் வீட்டிற்கு வரும்பொழுதே ஓய்ந்து போயிருப்பாள். இன்றைக்கு அதிசயமாகச் சீக்கிரமே விட்டுவிட்டார்கள்.
அவளது ஒரே மகள் கீர்த்தனா. இந்தாண்டு அவளுக்குப் பள்ளிப்படிப்பு முடிகிறது. கீதாவிற்கு வேலைப்பளுவுடன் தன் மகள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமேயென்ற அழுத்தமும் சேர்ந்துகொண்டது. தான் வேலை செய்யும் கல்லூரி போலல்லாது ஏதேனும் ஒரு நல்ல கல்லூரியில் கீர்த்தனாவிற்கு இடம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பின் பாரமும் அவளை அழுத்தியது.
Add Comment