பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அவற்றில் முதன்மையானது, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றுவது. இவ்வகையில் இப்போது ஐந்நூறுக்கும் மேற்பட்ட பங்களாதேஷ் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், அடையாள அட்டை இல்லாதவர்களைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். பங்களாதேஷிகள் எல்லை கடந்து இந்தியா வந்து வேலை செய்வது வாடிக்கையாக நடப்பதுதான். அதைத் தடுப்பதற்கென்றே இரு தரப்பிலும் பாதுகாப்புப் படையை வைத்திருக்கிறார்கள். எனினும் நீண்ட நெடிய சிக்கலான எல்லைப் பகுதி என்பதால் ஊடுருவல் எளிது.
இம்மக்கள் உத்திரப்பிரதேசம், குஜராத், டெல்லி எனப் பல இந்திய மாநிலங்களில் பரவி இருக்கிறார்கள். பலரிடம் இந்திய அடையாள அட்டைகூட இருக்கிறது. அடையாளம் காண்பதும் வெளியேற்றுவதும் எளிதான செயல் அல்ல. இந்தியாவின் பாதுகாப்பு கருதி ஒன்றிய அரசு தற்போது வெளியே தள்ளும் செயல்பாட்டில் முனைப்பாக இருக்கிறது.














Add Comment