நவஹோ! அமெரிக்க ஆதிவாசி இனத்தின் வழிபாட்டு முறையான இது இயற்கையுடன் இணைந்த ஒரு வேண்டுதல் ஆகும். நவஹோ பிரார்த்தனைகள், வழிபாட்டு முறைகள், நவஹோ இனத்தின் வாழ்வுடன் ஒருங்கிணைந்த பகுதியாகும். நவஹோ மக்கள், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும், ஒவ்வொரு பொருளுக்குள்ளும், ஒரு ஆன்மா இருப்பதாகவும், அது பிரார்த்தனை மூலம் அழைக்கப்படலாம், மற்றும் அதனுடன் தொடர்புகொள்ளலாம் என்று நம்புகிறார்கள். இந்து மதத்தில் எப்படிக் கல்லினுள் கடவுள் இருக்கின்றார் என நம்புகிறார்களோ, அது போல, நவஹோ மக்கள், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் உயிர் உள்ளது என நம்புகின்றனர். பொதுவில், நவஹோ பிரார்த்தனைகள், குணப்படுத்துதல், உயிர்ப்பாதுகாப்பு, சிக்கலான நேரங்களில் வழிகாட்டுதல் மற்றும் ஆன்மாக்களுக்கு நன்றி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment