ஏரிகளை நிறைக்கும் கண்ணீர்
கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள, தான்சென்யகா உள்ளடக்கிய பகுதியே தான்சேனியா.
உங்கள் கண்களுக்குப் பச்சைப்பசேலென்ற அழகான நாடு. ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குடிநீர் இன்றி அலைகிறார்கள்.
ஒரு காலத்தில் ஜெர்மனியின் கீழே கிழக்கு ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து காலனியாக இருந்தது. பிறகு பிரித்தானியாவின் அதிகாரம் கீழே வந்தது. 1947 தாங்கனாயிக்கா ஐக்கிய நாடுகளின் நம்பிக்கைக்குரிய பகுதியாக. பிரித்தானிய அரசின் காலனியாக மாறியது.
ஜூலியஸ் நயிரெரே(Julius Nyerere), தான்சேனியாவின் தந்தை. ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தவர். ஜீலியஸ் நயிரெரே சுதந்திர தான்சேனியாவின் அதிபராக ஆட்சி செய்தார். அவரைத் தொடர்ந்து அலி ஹாசன் ம்வினி அதிபராக இருக்கிறார்.
Add Comment