127. அண்ணன் தம்பி மோதல்
ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி.
அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான் நேருவிடம் கருத்து மாறுபாடு கொண்டு பேசி இருக்கிறேன். சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகக் கடுமையான சொற்களையும் பயன்படுத்தி இருக்கிறேன்.
நண்பர்களான எங்களுக்குள்ளே கருத்து மாறுபட்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த முடியாதா என்ன? எங்கள் இதயங்களில் துவேஷம் இல்லை!” என்று கூட ராஜாஜி எழுதி இருந்தார்.
நேருவும் கூட தனக்கு எப்போதும் ராஜாஜி மீது அன்பும், மரியாதையும் உண்டு என்றே கூறி வந்திருக்கிறார்.
அப்படி இருக்கும்போது தேச நலன் கருதி, இருவரும் சந்தித்து கருத்து வேறுபாடுகள் குறித்து மனம் திறந்து ஏன் பேசி இருக்கக் கூடாது? ஏன் இப்படி ஒரு பனிப்போர்? என்று அந்தக் காலத்து தேச பக்தர்கள் பலருக்கும் கூட மனதில் கேள்வி எழுந்தது!
இதற்குச் சுமார் ஓராண்டுக்கு முன்பாக ஆட்சி மொழிப் பிரச்னை தொடர்பாக நேருவுக்கும், ராஜாஜிக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடப்பதாக நேருவே பகிரங்கமாகச் சொல்லி வருத்தப் பட்டார்.
Add Comment