186. நகர்வாலா மரணம்
மறுநாள், 1971 மே மாதம் 27ஆம் தேதி, நீதிபதி அகர்வால் முன்பாக, ஸ்டேட் பாங்க் கிளைக்கு நூறு ரூபாய்க்குச் சில்லறை மாற்றுவதற்காகச் சென்ற நகர்வாலா, எப்படி 60 லட்சம் ரூபாய் கொள்ளைத் திட்டத்தைச் செயல்படுத்தினேன் என்று ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
‘பங்களாதேஷுக்காக ஏதாவது செய்து, அதன் மூலம் நாடு முழுக்க பரபரப்பு ஏற்படுத்தி, பிரதமரின் கவனத்தை ஈர்க்க விரும்பினேன். சட்டென்று மனதில் தோன்றிய எண்ணத்துக்குப் பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் துரிதகதியில் செயல் வடிவம் கொடுத்துவிட்டேன்.’
‘என் முட்டாள்தனமான செயலில், அப்பாவியான பாரத ஸ்டேட் பாங்கின் தலைமை கேஷியர் வி.பி. மல்வோத்ரா பெரும் ஆபத்துக்குள்ளாகி விட்டார். அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். நான் ஒருபோதும் எவரையும் ஏமாற்றவேண்டும் அல்லது மோசடி செய்யவேண்டும் என்று நினைத்தது கிடையாது. எனவேதான், நான் அந்தப் பணத்தை போலிஸின் மூலம் வங்கிக்குத் திருப்பிக் கொடுத்தேன்.’
‘ஆரம்பம் முதலே நான் போலிஸுக்கும் வங்கிக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். நான் பணத்துடன் ஓடி, ஒளிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை. இப்போது நீதித்துறையுடனும் அப்படித்தான் இருக்கிறேன்.














Add Comment