Home » ஒரு  குடும்பக்  கதை – 88
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 88

88. விதியுடன்  சந்திப்பு

பிரிவினைக் காலகட்டத்தில்  டெல்லியின் நிலைமை என்ன?

தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.  மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள்.  அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.

அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த கோரமான, அருவருப்பான அவல அனுபவங்களைக் கண்ணீர் மல்க விவரித்தார்கள்: ஒட்டுமொத்தமாக கிராமங்கள் அழிக்கப்பட்டன.

கணக்கிலடங்காத எண்ணிக்கையில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள்; தூக்கிச் செல்லப்பட்டார்கள்; சூறையாடிய பொருளாக விநியோகிக்கப்பட்டார்கள். சில நேரங்களில் பகிரங்கமாக விற்கப்பட்டார்கள்.

மனிதாபிமானம் என்பது செத்துப் போனது. கைக்குழந்தைகளும் ஈவிரக்கமின்றி ஈட்டி முனையால் குத்திக் கொல்லப்பட்டார்கள்.

கணவரைப் பறிகொடுத்த மனைவியர், மனைவியைப் பறிகொடுத்த கணவர்கள், பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்  என்று ஏராளமானவர்கள் வந்தார்கள்.

அகதிக் கூட்டங்களின் மீதும், உயிருக்கு பயந்து தப்பி ஓடி வந்த அகதிகள் பயணித்த  ரயில்களின் மீதும் வழியில் கடுமையான தாக்குதல்கள் நடந்தன. ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் பயணத்தின்போது பட்ட காயங்களுடன் டெல்லியை அடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து வெளியேறி வந்த இந்துக்கள் மீதுதான் இத்தகைய கொடூரங்கள் நடத்தப்பட்டன என்று சொல்ல முடியாதபடி, வட இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட கலகங்கள் காரணமாகப் பயந்து, பாகிஸ்தானுக்கு ஓடிய முஸ்லிம்களுக்கும் இதே மாதிரியான கொடிய அனுபவங்கள்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!