Home » பனிப் புயல் – 16
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 16

16 – காளான் வேட்டையும் ஐஸ்கிரீம் ட்ரீட்டும்

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைப் போன்றது செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் சட்டக்கல்லூரி. அங்கு நுழைவது எளிதல்ல. நூறு இடங்களில் பத்து மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். மீதி ராணுவத்தினருக்கு. அந்தப் பத்தில் ஒன்றைப் பிடிப்பதற்காகப் பள்ளி முதலே கவனமாகத் திட்டமிட்டிருந்தான் வலோத்யா.

சட்டக்கல்லூரிக்குத் தேர்வாக, பள்ளியில் வாங்கிய மொத்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கல்லூரிக்குத் தேவையான, ஆங்கில இலக்கியம், வரலாறு, சமூகவியல், வெளிநாட்டு மொழி, அரசியல் மேலாண்மை ஆகிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

ஆரம்பத்திலேயே இலக்கை நிர்ணயித்து விட்ட வலோத்யா, மேற்சொன்ன அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அறிவியல் போன்ற பாடங்களில் கவனமே செலுத்தவில்லை. அவனது பிடிவாதத்தை அறிந்திருந்த ஆசிரியர்களும் அவனது விருப்பத்துக்கேற்பப் பயிற்சியளித்து உதவியிருந்தார்கள். யங் பையனீர்ஸ் இயக்கத் தலைவனாக இருந்தது கம்யூனிசக் கட்சியின் இளைஞர் கழகத்தில் சேர உதவியது. இவற்றின் மூலம் பல்கலைக்கழகத்தில் நுழைவது வலோத்யாவுக்கு எளிதானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!