25 – அடையாள அட்டை
ஜனவரி – 1974.
கல்லூரிப் பேராசிரியர்களுக்கான முகப்பறையில் காத்துக்கொண்டிருந்தார் வலோத்யா. நுழைவாயிலில் படர்ந்திருந்த வெண்பனி, தனக்கடியில் மர்மங்களைப் புதைத்து வைத்திருந்ததைப் போல உணர்ந்தார். அவரை அங்கு காக்க வைத்தது ஒரு மர்ம மனிதரின் இந்த வார்த்தைகளே.
‘உன் பணி நியமனத்தைக் குறித்துப் பேச வேண்டும். அது என்னவென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.’
சந்திப்பு எங்கே என்று வலோத்யாவே புரிந்து கொண்டார். ஒருவேளை இது நண்பர்களின் சேட்டையாக இருக்குமோ என்ற சந்தேகமும் வந்தது. இருபதாவது நிமிடத்தில் அந்த மர்ம மனிதர் ஓடி வந்தார்.
‘தாமதத்துக்கு மன்னித்து விடு’ என்று மூச்சு வாங்கியபடியே பேச ஆரம்பித்தார்.
‘வலோத்யா, உனக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. ஆனால் காலமிருக்கிறது. நிறுவனத்தில் பணிபுரிய அழைக்கப்பட்டால், நீ அதை எவ்வாறு எடுத்துக்கொள்வாய்?’ என்றார்.















Add Comment