வ.ராமசாமி
வ.ராமசாமி ஐயங்கார் என்கிற வ.ரா. (17 செப்டம்பர் 1889 – 23 ஆகஸ்ட் 1951) ஓர் எழுத்தாளராகவும், இதழாசிரியராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த வ.ரா. ஸ்ரீஅரவிந்தர், பாரதியார் போன்றோருடன் நெருங்கிப் பழகியவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றுப் பலமுறை சிறை சென்றவர். இவர் ஆசிரியராயிருந்து நடத்திய ‘மணிக்கொடி’ என்ற இதழ் தமிழ்ப் பத்திரிகையுலக வரலாற்றில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய இதழாக விளங்கியது.
Add Comment