உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போதையப் பிரதமரின் ஆட்சிக் காலம் முடியவும் இல்லை. யாரும் இறக்கவும் இல்லை, தேர்தல் நடக்கவும் இல்லை. ஆனாலும் புதிய பிரதமர்!
பிரதமர் லீ சியான்ன் லூங், லாரன்ஸ் வோங் தலைமையிலான அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தம் இளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டுத் தலைமைப் பொறுப்பில் இருந்து இறங்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். இதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் பதினைந்தாம் தேதி வோங் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார்.
படிப்பதற்கு ஏதோ ஒரு அரசர் தம் கிரீடத்தைக் கழற்றி இளவரசரின் தலையில் சூட்டிவிட்டுச் செல்வதைப் போல இருக்கிறதல்லவா?
Add Comment