Home » சாத்தானின் கடவுள் – 23
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 23

23. தீயினிலே வளர் சோதி

வள்ளலார் என்று நாமறிந்த ராமலிங்க அடிகளை ஒரு வகையில் எதிர் புத்தர் என்று சொல்ல இயலும். இருவரது தேடலின் வழிகள் வேறு வேறு என்றாலும் விளைவு ஒன்று. கண்டடைந்தது ஒன்று. இருவரும் பயன்படுத்திய கருவியும் ஒன்றே. அறிவின் துணை கொண்டு மட்டுமே தமது தேடலின் விளைவைப் பகுப்பாய்வு செய்தவர்கள். ஒரே வித்தியாசம், அவர் கடவுளே இல்லை என்று சொன்னார். இவர் எல்லா உயிர்களும் கடவுளின் அம்சமே என்று சொன்னார்.

அதனால்தான் உணர்ச்சி மிக்க பாக்களால் கடவுளைப் போற்றிப் புகழ்ந்த சமயக் குரவர்களோடும் ஆழ்வார்களோடும் அவரைச் சேர்த்து அமரவைக்க முடிவதில்லை.

அவர் முருகனைத் துதித்தார். திருஞானசம்பந்தரைத் தமது தொடக்க கால வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறார். ஆயினும் தன்னறிவு தெளிந்த பின்பு மதம் உள்ளிட்ட அனைத்துச் சட்டகங்களுமே உள்ளொளியை எட்டிப்பிடிக்க இடைஞ்சல் என்று கருதினார். அந்த உள்ளொளியைத்தான் அவர் அருட்பெரும் ஜோதி என்று வர்ணித்தார்.

டி ராஜேந்தர் படங்களில் இதயமே என்று பாடலில் ஒரு வரி வந்தால் உடனே ஆளுயர இதய பொம்மையைக் காட்டிவிடுவார் அல்லவா? நம் மக்களுக்கு அதுதான் வசதி. எதையும் காட்சி ரூபமாகப் பார்த்துப் புரிந்துகொள்வது. இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலார் உணர்ந்திருக்கிறார்.

என்ன கெட்டுவிட்டது? ஏற்று ஒரு ஜோதியை! தமிழ்நாட்டில் ஜோதி வழிபாடு என்ற ஒன்று தோன்றியது அப்படித்தான். இதனைப் பிறகு விரிவாகப் பார்க்கலாம். வள்ளலாரைச் சிறிது அணுகி ஆராய வேண்டிய கட்டம் இது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • //”படித்தால் புரியக் கூடியதும் அதுவல்ல”// எப்பிடிபட்ட வரிகள் சார் :-).
    ஊரன் அடிகளாரின் பாடலில், “தலைவ” என்பது அண்மை விளியல்லவா? இறைவன் அவருக்கு அருகிலேயே இருக்கிறான் என்று சொல்வதுபோல் உள்ளது அவ்விளி.

    ஊரன் அடிகள், வள்ளலார் பற்றியும் மகாவீரர் பற்றியும் எழுதிய புத்தகங்களைச் சிறுவயதில் படித்து, அசைவனாக இருக்கக் குற்றவுணர்ச்சி கொண்டிருந்திருக்கிறேன். ஆனாலும், நாவை அடக்கவியலவில்லை. இருந்த கொஞ்சநஞ்சக் குற்றவுணர்ச்சியையும், நியாண்டர் செல்வனின் ‘பேலியோ டயட்’ புத்தகம் அழுந்தத் துடைத்துவிட்டது.
    அருட்பாவை, நான் முழுவதுமாக ஊன்றிப் படித்ததில்லை. இவ்வத்தியாயம் அவ்வாவலை ஏற்படுத்துகிறது.
    ஆனாலும், அந்தக் குற்றவுணர்ச்சிதான் பயமுறுத்துகிறது.

    • உணவு சார்ந்த குற்ற உணர்ச்சி கட்டுப்படி ஆகாது. அவரவர் விருப்பம், அவரவர் தேர்வு. வள்ளலார் ஓர் உணவு பயங்கரவாதி. அவர் சொல்லும் கட்டுப்பாடுகளெல்லாம் நடைமுறை சாத்தியமற்றது. உணவில் எளிமை என்பதை மட்டும் ஏற்றுக் கடைப்பிடிக்கலாம். அவ்வளவுதான் நமக்கு முடியும்.

  • வள்ளலாரின் ஜோதி தரிசனம் இரண்டு ஆண்டுக்கு முன்பு, கட்டுக்கடங்காத கூட்டத்தில் கண்டபோது, அதை உணர்ந்து கொண்ட மகிழ்ச்சி ஞாபகம் வருகிறது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!