28. அதுவா? நாமா?
கடவுளின் இருப்பையும் வாழ்வையும் தெரிந்துகொள்ள விரும்பிப் பிரதிகளின் வழியே மேற்கொண்ட பயணத்தில் எனக்கு இரண்டு விளைவுகள் வாய்த்தன. முதலாவது அவன் இல்லை ஆனால் அது இருக்கிறது என்கிற தெளிவு. இரண்டாவது, மதங்களின் அடியொற்றிச் சென்றால் அதைக் கண்டடைய முடியாது என்கிற இன்னொரு தெளிவு.
உலகில் நடைபெறும் பெரும்பாலான குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் இருந்து இயங்கும் ஒரு நிறுவனம் தூய பிரம்மம் அல்லது தூய பரம்பொருளின் சொரூபத்தை உணர்த்தவல்லது என்ற நம்பிக்கை இல்லாது போய்விட்டது. எப்படி மனிதர்களுக்குக் கதைகளின் வழி கட்டமைக்கப்பட்ட கடவுள்களின் உருவங்கள் தேவைப்படுகிறதோ, அதே போலத்தான் மதங்களுக்கு சாதிகளின் வழி கட்டமைக்கப்பட்ட சமூக அடுக்கு வேண்டியிருக்கிறது. மன்னர்களுக்கு ஆட்சி புரிய உதவுவதற்காக உலகெங்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு பல்வேறு பெயர்களில், பல்வேறு சட்டதிட்டங்களுடன் மன்னர்களினும் உயர்ந்த ஒன்றாக உருவெடுத்து நின்றதன் பின்னணியில் கதாசிரியர்களின் திறமை மறைந்திருக்கிறது.
Add Comment