30 எலியும் பூனையும் ஊர்வலம் பெங்களூரை நெருங்கப்போகிறது எனும்போது – நாங்களும் சைக்கிள் ஓட்டுகிறோம் என்கிற பூனே பெண்களின் கோரிக்கை மறுபடி தலைதூக்க ஆரம்பித்தது. பெங்களூர் தன்னுடைய ஊர் என்கிற நிறைவில் சுஜாதா அமைதியாக இருந்திருக்கவேண்டும். அல்லது, முதல் முதலாக அவள் முன்வைத்த, அந்த மூவரைப்போலத்...
Tag - சக்கரம்
29 பேச்சு தமிழில் இலக்கியம் என்பதே சிறுபத்திரிகையை மட்டுமே சார்ந்ததாக இருந்தாலும் பேர் சொல்லும்படியான எழுத்தாளர்கள் கவிஞர்கள் என ஊருக்கு ஒருவராவது இருந்துகொண்டிருந்தனர் என்பதுதான் வாழையடி வாழையாய் இலக்கியத்தின் உயிரை இழுத்துப் பிடித்து வாழவைத்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும். பரீக்ஷாவில் இருந்தபோதே...
28 அஸ்திவாரம் ருத்ரைய்யா ஆபீஸில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த இரவொன்றில், சுடச்சுட வந்துகொண்டிருந்த இட்லியைச் சாப்பிட்டபடி இருக்கையில் ‘உன்னோட பாஸ்ட்ட எழுதினாலே போதும் ஆளாயிடுவேன்னு நீ ஒரு தடவை சொன்னே. நினைவிருக்கா‘ என்று இருந்தாற்போலிருந்து கேட்டான் வசந்தகுமார். சொன்னது போலவும்...
27 நமக்கல் நாமக்கல் என்கிற பெயர், இரண்டு முதல் நான்கு வயதுவரை சேலத்தில் இருந்த சமயத்தில் அம்மாவின் புலம்பல் மூலமாகத்தான் அறிமுகமானது. சேலத்தில் இருக்கிறோம் என்றுதான் பெயரே தவிர, ஒரு எட்டு போய் நரசிம்மரையும் நாமகிரித் தாயாரையும் பார்க்கமுடியவில்லையே என்று அவள் புலம்பாத நாளே கிடையாது. மூன்று நான்கு...
26 போனோ வண்டியை எடுக்கப் பார்க்கையில் உதைத்து உதைத்துக் காலே போய்விட்டது. என்ன ஆயிற்று என வழிந்த வியர்வையைச் சுண்டிவிட்டுக்கொண்டபடி யோசித்தாள் சுஜாதா.
25 இருவர். மணப்பாறையிலிருந்து திருச்சி போகும் வழியில், இளவெயிலில் ரேலியை நிறுத்தி, வழக்கமாகக் கொடுக்கப்பட்டும் குசேலக் கொடையான அவில், பேப்பர் தட்டுகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
எந்த மாமல்லன் என்று அவர் கேட்பதற்குள்ளாக வந்து கதவைத் திறந்த இந்திரஜித், 'நீ உள்ளபோ. வெளக்கு இருக்கட்டும். நான் வெளிய பூட்டிக்கிறேன்' என்று கேட்டைப் பூட்டிக்கொண்டு இவனுடன் இறங்கினார்.
'இதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. பாபாவிடம் பேசுங்கள். அதற்கு வேண்டுமானால் நான் ஏற்பாடு செய்கிறேன்' என்ற கர்னல் ரேகே பாபாவிடம் அழைத்துச்சென்றார்.
ராஜபாளையத்தில் வந்து இறங்கிய உடனே, குளிக்கவேண்டும்போல் கசகசவென இருந்தது. தூறத்தொடங்கி அல்பாயுசாக நின்றுவிட்டிருந்த மழையின் புழுக்கமும் வேறு சேர்ந்துகொண்டது.
இரவு தங்கப்போவது அருவிகளுக்குப் பெயர் பெற்ற குற்றாலத்தில் என்று அத்துல் சொல்லிக்கொண்டிருந்ததில் அத்தனைப்பேருமே பரவசமாகிப்போனார்கள்.












