25 இருவர்
மணப்பாறையிலிருந்து திருச்சி போகும் வழியில், இளவெயிலில் ரேலியை நிறுத்தி, வழக்கமாகக் கொடுக்கப்பட்டும் குசேலக் கொடையான அவில், பேப்பர் தட்டுகளில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. டீ மட்டுமே குடித்துவிட்டுக் கிளம்பியிருந்ததால், இரண்டு மணி நேரமாக சைக்கிள் மிதித்ததில் பிடி அவலே பிரமாதமானக் கல்யாண சாப்பாடுபோல இருந்திருக்கவேண்டும். பரபரவெனத் தின்றால் சீக்கிரம் தீர்ந்துவிடுமே என்கிற கவலையில் வண்டியுடன் வரிசையாக நின்றிருந்த கூட்டம் ஒவ்வொரு அவலாக எடுத்துக் கொறித்துக்கொண்டிருக்கையில், சுதீர் எதிரில் இருந்தாலும் அவனிடம்கூட ஒன்றும் பேசத் தோன்றாமல், இவன் தின்று முடித்து எதோ யோசனையுடன் இலக்கற்று எங்கோ பார்த்துக்கொண்டிருதான்.
இவனுக்குப் பின்னாலிருந்து ‘ஹாய்’ என்கிற சுஜாதாவின் குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தான். இவள் எங்கே இங்கே வந்தாள்.
‘என்ன சொல்கிறான் நர்ஸி’ என்று சிரித்தபடியே சுதீரிடம் கேட்டாள்.
ஓஹோ. இந்த ஹாய் சுதீருக்குதானா நமக்கில்லையா எனச் சுருக்கென்றது.
‘இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியாதா’ என்று கேட்டான்.















Add Comment