கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தும் பட்டியல் அது. அதில் உலகத்திலே பாதுகாப்பான நாடாக 2ம் இடத்தினைப் பிடித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும்...
Tag - அமீரகம்
அமீரகத்தோடு தமிழகத்தின் வர்த்தகத் தொடர்பைப் பலப்படுத்தும் விதமாக சென்னை வந்திருந்தார் அமீரக நிதி அமைச்சர் அப்துல்லா பின் தோக் அல் மாரி. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சந்திப்பின் போது, முதலீடுகள் சார்ந்து தமிழ் நாட்டின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, முப்பது...
அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன்...
உலகத்தின் உயரமான புரூஜ் கலீபா, ஏழு நட்சத்திரம் உணவகமான புரூஜ் அல் அரப் என்று பிரமாண்டத்திற்குக் குறைவில்லாத துபாயில் அதிகமான கல்விக் கட்டணம் கொண்ட கல்வி நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ஜெம்ஸ் ரிசேர்ச் அண்ட இன்னோவேஷன் (GEMS RESEARCH AND INNOVATION)...
துபாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. பின் மீன் பிடி கிராமமாக மாறியது. காய்ந்த வெயிலையும் மணலையும் சும்மா விட்டு வைக்காமல் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள் ஷேக்மார்கள். இருப்பதை வைத்து எல்லா விஷயத்திலும் உச்சம் தொடுவதில் ஐக்கிய அமீரக அரசர்கள் கில்லாடிகள். பாலைவனமும் கடலும்...
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏப்ரல் மாதத்தில் நான் அபுதாபிக்குக் குடிபெயர்ந்தேன். நல்ல கத்திரி வெயிலின் வெப்பம் தெரிந்தது. நமக்கெல்லாம் கத்திரி வெயில் ஆரம்பம் என்று பேப்பரில் பார்த்த உடன் வத்தலும் வடகமும் தான் நினைவிற்கு வரும். மழைநீர் வீணாகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால்...
‘ஸீடிங்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். விதைத்தல். ‘க்ளவுட் சீடிங்’ என்றால் என்னவென்று தெரியுமா..? அப்படியே மொழிபெயர்த்து ‘மேகத்தை விதைப்பது அல்லது மேகத்தில் விதைப்பது என்றால் குழப்பும். ஆனால், மேகத்தை மெலிதாக ஏமாற்றுவது எப்படி, அதனால் என்ன பயன் என்பதைத் தெரிந்து கொண்டால் முழுமையாகப்...