116 நேரம் ஐஸ் ஹவ்ஸ் மசூதி சந்திப்பில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரமேஷ் சொன்னான், ‘என் ஃபிரெண்டு சேகர் உன்னைப் பத்தி விசாரிச்சாண்டா’ என்று. ‘சேகரா. அது யாரு.’ ‘அதாண்டா உங்க ஆபீஸ்ல பெரிய போஸ்ட்ல இருக்கான். ஒரு யூத் கேம்ப்ல மீட் பண்ணினேன்னு சொன்னேனே. நீ கூட, உங்க...
Tag - இலக்கியம்
விமலாதித்த மாமல்லன் இரண்டு ரேஞ்சுகளுக்குப் பொதுவாக இருந்த போனில் பேசிவிட்டு வந்த மணி சார், ‘நடிகை நாடகம் பார்க்கிறாள் வருதாமே’ என்று, சொன்னதைக்கேட்டு எல்லோரும் சிரித்தனர். ‘எங்க வருது. நாவல் படிச்சிருக்கேன் படம் பாத்ததில்லே’ என்று, எதிர்ப்பக்க நாற்காலியில் அமர்ந்து அமைதியாக சிகரெட்...
115 கணக்கும் வழக்கும் ஒரு மதியம் சுந்தர ராமசாமியை ரயிலேற்றிவிட வசந்தகுமார் மோகன் போன்ற நண்பர்களுடன் எக்மோருக்குப் போயிருந்தான். பழம் வாங்கப் பணம் கொடுத்தார். வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். வண்டி முதல் விசிலைக் கொடுத்தபோதுதான் மீதியைக் கொடுக்காதது...
விமலாதித்த மாமல்லன் டெலிபோன்ஸில் வேலைபார்த்த ஹைதராபாத் பெரியப்பா கட்டிய வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக, பாண்டிச்சேரியிலிருந்து வந்தபோதுதான் நரஹரி முதல் முறையாக செண்ட்ரல் ஸ்டேஷனைப் பார்த்தது. மேலே கூரை இருந்தாலும் அவ்வளவு பெரிய திறந்தவெளியை, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவன் அதுவரை பார்த்ததில்லை...
விமலாதித்த மாமல்லன் ‘நாளைக்கு வேலை இருக்கும். ஃபிரீயா வெச்சுக்குங்க.’ என்றார், ஏஓ டிடிஓ போனில் வந்த கிரிதர். நாய்க்கு வேலையில்லே நிக்க நேரமில்லே எனத் திரிந்து கொண்டிருக்கிற தானென்ன தனியாக ‘ஃப்ரீயாக’வைத்துக்கொள்வது, எப்போதுமே ஃப்ரீதானே என நினைத்துக்கொண்டே, ‘ஏசிக்கிட்ட…’ என்று இழுத்தான்...
114 பிரிவும் சந்திப்பும் ஶ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை கட்டுரையைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியதில் நிமாவைப் பற்றிய நினைவே எழவில்லை. தனக்காக அவள் என்னவும் செய்வாள் என்கிற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, புத்தகத்துக்கு இல்லை என்று அவள் மறுத்தது சுருக்கென்று தைத்தது. எடுத்திருப்பது எவ்வளவு...
113 உறவுகள் இந்திரா காந்தி எங்கேயோ இருப்பவர் என்பதாலோ என்னவோ அவர் மீதான தீவிர விருப்பத்தைப்போலவே படுகொலையின் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிரான தீவிர வெறுப்பும் இங்கே பெரிதாக இருக்கவில்லை. பெயருக்கு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் மோட்டார் உதிரி பாகங்கள் விற்கிற நான்கு சர்தார்ஜிக்களை அடித்ததோடு கடமையை...
விமலாதித்த மாமல்லன் சாஸ்திரி பவன் மரநிழலில் நின்றிருந்த பழைய மெட்டடார் வேனில் ஏறி அமர்ந்ததும் எல்லாரும் ஏறியாச்சா என்று தமக்குத்தாமே சன்னமாக வாய்விட்டுக் கேட்டுக்கொண்டபடி உள்ளே இருந்த நான்கைந்து பேரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்ட கிரிதர், மடியில் இருந்த தோள் பையை அனிச்சையாகத் தொட்டுப்...
112. வடு ‘என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா.’ ஆபீஸில் யாரோ அவனிடம் சொன்ன செய்தியை அதிர்ச்சியில் சத்தமாக எதிரொலித்தான். நெஜமாவா. நெஜமாவே சுட்டுட்டாங்களா. உயிரோட இருக்காளா போய்ட்டாளா என்றான் நடைவழிக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்திருந்த கேஷியர் விஸ்வநாதன். அவ்வளவுதான் வதந்தியா செய்தியா என்றே...
111 தத்து என்றாவது ஒருநாள் அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று மனத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசை, ரங்கன் துரைராஜை டிரைவ் இன்னில் பார்த்துத் திட்டித் தீர்த்ததுமே நிராசையாகிவிட்டது. ஆனால், அன்றிலிருந்து டிவி வாங்கியே தீருவது என்கிற வெறி உள்ளூர கனலத் தொடங்கிக் கண்ணில்...