Home » கடன்

Tag - கடன்

தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 48

48. பங்காளி ஆகலாம் உங்கள் தெரு முனையில் ஒரு சிறிய இட்லிக் கடை இருக்கிறது. நீங்கள் அவ்வப்போது அங்கு சாப்பிடுவதுண்டு. இட்லி, மூன்று வகைச் சட்னி, சாம்பார் என்று அனைத்தையும் சுவையாகவும் தரமாகவும் மலிவாகவும் தருகிற அந்தக் கடைக்காரரைப் பாராட்டுவதும் உண்டு. ஒருநாள், இட்லியைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 47

47. வீடு, நிலம், இன்னபிற என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கோயம்பத்தூரில் சொந்த வீடு வைத்திருந்தார். அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போகும்போது அதை விற்றுவிட்டார். அதன்பிறகு, இன்றுவரை அவர் பல இடங்களில் வசித்திருக்கிறார். ஆனால், எங்கும் சொந்த வீடு வாங்கவில்லை. திரும்பத் திரும்ப வாடகை வீடுதான்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 35

35. கடன் மறுகட்டமைப்பு ஒருவருடைய கடன் சுமை எல்லை மீறினால் என்ன ஆகும்? அதாவது, அவர் வாங்கியிருக்கும் கடன்களுக்காக மாதந்தோறும் செலுத்தவேண்டிய ஒட்டுமொத்தத் தவணைத் தொகை, அவருடைய மாத வருமானத்தைவிடக் கூடுதலாக இருந்தால்? இதற்குமேல் அவருடைய வருமானத்தை உயர்த்துவதற்கு எந்த வழியும் தென்படாவிட்டால்? இந்தச்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 34

34. மதிப்பைக் கூட்டும் மதிப்பெண் பெரியவர்கள் சிறுவர்களை வாழ்த்தும்போது, ‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்பார்கள். இதன் பொருள், ஊருக்குள் யாராவது நம்மைப்பற்றி விசாரித்தால் அவர்கள் நல்லவிதமாகப் பேசவேண்டும், ‘அவர் நல்லவர், நீங்கள் அவரோடு பழகலாம்’ என்று மனமாரப்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 33

33. கசப்பு மருந்து ஒன்றோ, இரண்டோ, பலவோ, கடனோடு வாழ்வது இன்றைக்குப் பலருக்கு இயல்பாகிவிட்டது. குறைந்தபட்சம் ஒரு வீட்டுக் கடன், அப்புறம் வண்டிக் கடன், கல்விக் கடன், திருமணக் கடன் என்று நீளும் இந்தப் பட்டியலில் சுற்றுலாவுக்கு வாங்கிய கடன், புது மொபைல் ஃபோனுக்கான கடன், வீட்டில் பெரிய பொருட்களை வாங்கிய...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 32

32. எதிர்மறைக் கேள்விகள் கடன் வாங்குவது என்பது ஒருவர் ஏற்றுக்கொள்கிற மிகப் பெரிய பொறுப்பு. ஓராண்டுக்குள் முடிந்துவிடுகிற சிறிய கடன்கள்கூடக் கொஞ்சம் பரவாயில்லை. ஐந்து, பத்து, இருபது, ஏன், முப்பது ஆண்டுகளுக்குக்கூட நீளக்கூடிய கல்விக் கடன், கார் கடன், வீட்டுக் கடன், தொழிற்கடன் போன்றவற்றைத் தொடங்குமுன்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 31

31. வாங்கலாமா, வேண்டாமா? ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ஒரு வரியைக் கேட்டிருப்பீர்கள். இது எவ்வளவு பொருத்தமான உவமை என்பது உண்மையில் கடன்பட்டவர்களுக்குத்தான் தெரியும். அந்தக் கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த இயலாமல் தடுமாறியவர்களுக்குத்தான் தெரியும்...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 29

29. நம்முடைய காரணம் என்ன? பூங்காவில் மாலை நடையின்போது நான் அடிக்கடி சந்திக்கிற நண்பர் அவர். பெரிய வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றுகிறார். வருவாய் அடிப்படையில் பார்த்தால், உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர். ஒருநாள், அவருடைய மகன் அவரிடம் வந்து, தயங்கித் தயங்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறான்...

Read More
உலகம்

வானைத் தொடும் சீனக் கடன்!

பலரும் அண்ணாந்து பார்க்கும் வண்ணம் உயர உயரப் பறந்துகொண்டிருந்த ஒரு வண்ணமயமான பலூன் கொஞ்சம் கொஞ்சமாகத் தரையில் இறங்கினால், ஒரு வித வருத்தமே ஏற்படும். எப்போதாவது அதீத பொருளாதார நெருக்கடியில் பலருக்குக் கடன் கொடுத்துவிட்டு, நமக்கே ஒரு நெருக்கடி வரும் போது அதைத் திரும்பக் கேட்க முடியாமலும் அவர்களாகக்...

Read More
உலகம்

மக்களே, கடன் கொடுங்கள்!

‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளை நீங்கள் படித்திருக்கக் கூடும். கடந்தசில வாரங்களாக அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்திக்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!