அமெரிக்கத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் முன் கூட்டியே வாக்களிப்பு தொடங்கிவிட்டிருக்கிறது. அஞ்சல் வழி வாக்களிப்பவர்களும் பதிய ஆரம்பித்துவிட்டார்கள். சீசா விளையாட்டைப் போல, கருத்துக் கணிப்புகள் மாறி மாறி இரண்டு பேருக்குமே சாதகமாக வருகின்றன. ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா...
Tag - குடியரசுக் கட்சி
ஆடல், பாடல், பலூன்கள், கொண்டாட்டம். அமெரிக்கக் கட்சி மாநாடுகள் களைகட்டும் மாதம் இது. அமெரிக்கத் தேர்தலில் பரப்புரைகள், விவாத மேடைகள் தவிர, கட்சி மாநாடு மிக முக்கியமானது. கட்சியின் முதன்மையான தலைவர்கள் நேரில் வந்து தங்களின் ஆதரவைத் தங்கள் கட்சி வேட்பாளருக்கு உறுதி செய்வார்கள். அதற்குப் பிறகே அதிபர்...
பல மாதங்களாகப் பரப்புரைகள், விவாதங்கள், நகரசபைக் கூட்டங்கள், நிதி திரட்டுதல் ஆகியவற்றுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஜனவரி 17அன்று தங்கள் முதல் தேர்தல் களத்தை அயோவாவில் எதிர்கொண்டனர். இவாஞ்சலிக்கள்(evangelics), தீவிர வெள்ளை நிற இனப்பற்றாளர்கள் ஆதரவுடன், ‘எலும்பை...
அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் இன்னொரு முக்கிய வேட்பாளர் ஃப்ளோரிடா ஆளுநர் ரானால்ட் டிசாண்டிஸ். முன்னாள் அதிபர் டிரம்ப் என்ற ஒரு கோப்பை நீரைச் சின்னக் குவளைகளில் ஊற்றினால் எப்படி ஒவ்வொரு கோப்பை நீரும் ஒரே தன்மையோடு ஆனால் அந்த அந்தக் கோப்பைகளின் வடிவோடு இருக்குமோ அதேபோலத்தான் ரானும் வேறு உருவம்...
மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக்கொண்ட இன்னொரு குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால் முதன்முதலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் என்ற சிறப்பும் மிகக் குறைந்த வயதில் அதிபரானவர் என்றதும் ஆகிய இரண்டு சிறப்புகள் கிடைக்கும். சிறந்த...
இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபின், உள்நாட்டின் பாதுகாப்பும் தீவிரவாத எதிர்ப்பும் ஜனநாயகக்கட்சியின் முக்கியக் கொள்கையில் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. மனித உரிமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாமல் பாதுகாப்பதும் முக்கியக் கொள்கையாகச் சேர கொஞ்சம் கொஞ்சமாக இடது சாரி பக்கம் முழுவதுமாக மாறத் தொடங்கியது...
அமெரிக்கக் காங்கிரசின் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கக் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றுகின்ற நாடகங்கள் நகைப்புடையதாக மாறியிருக்கின்றன. தீவிர வலதுசாரி உறுப்பினர்களின் கோரிக்கைகளும் மிதவாதப் பழமை வாதிகளின் செயலாக்கங்களும் ஒத்துப் போகாமல், இன்னும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தக் குடியரசுக்...
அமெரிக்கத் தேர்தலைத் தொடர்கிறவர்களின் கவனத்தைக் கட்டியிழுப்பது, கொள்கைகளுக்கான விவாதங்கள் மட்டும் அல்ல. கட்சியின் அரசியல் செயற்மட்டக் குழுக்களும், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களும் எவ்வளவு நிதி நன்கொடையாக வசூலித்தார்கள், யார் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பதுவும் கூடத்தான். கடந்த 2020-இல்...
உலகில் இரண்டு பெரிய மக்களாட்சி நடக்கும் நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டுமே ஜனநாயக முறையில் ஆட்சி நடக்கும் நாடுகள்தான் என்றாலும் இரண்டின் தேர்தல் முறையும் மாறுபட்டவை. அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது...