அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...
Tag - ஜனாதிபதி ரணில்
தேர்தல் நடக்குமா நடக்காதா என்று ஒரு தேசத்தின் மக்கள் குழம்பிப் போவதைப் போன்ற அபாக்கியம் வேறெது இருக்க முடியும்? இலங்கையில் ஜனாதிபதி ரணிலின் அண்மைய நகர்வுகள் எதுவுமே நம்பும்படியாய் இல்லை. இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்பு வெளியிட்டிருந்தோம். தனது அடிப்பொடிகளைப் பயன்படுத்தி மேலும் இரண்டு...
இந்த வாரத்துடன் ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சேவுக்குமிடையில் தேர்தல் உடன்பாடு தொடர்பாய் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. இப்படியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதனால் ரணிலின் வயிறுதான் ஒரு சுற்றுப் பருத்துப் போகிறதே தவிர கண்ட பலன் எதுவுமில்லை. மறு...
தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும். இலங்கைக்கு என்று ஒரு...
இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும் இழுபறிக்குள்ளாகி இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவித்திட்டம் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் முந்நூற்று முப்பது மில்லியன் டாலர்களை...
இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று...