தமிழ்ப் பத்திரிகைகளில் வண்ணத்தில் அச்சிடுவது என்பது ஏறத்தாழ 1930 முதலே வழக்கத்தில் வந்துவிட்டது. ப்ளாக்குகள் எடுத்து அச்சிடுகிற காலம் அது என்பதால் செலவு அதிகம் பிடிக்கும். எனவே, அட்டைப்படங்களை மட்டும் மல்டி கலரில் அச்சிடுவார்கள். பிற பக்கங்கள் சிங்கிள் கலரில் (அ) கறுப்பு வெள்ளையில் அச்சாகியிருக்கும். இதுவே வழக்கமாக இருந்தது. அந்தக்கால வண்ண ஓவியங்களின் உலாவை எங்கிருந்து தொடங்குவது..? அகர வரிசையில் ஆனந்த விகடனிலிருந்து துவங்கலாம்.
இதைப் படித்தீர்களா?
53. ஜீவாத்மா ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தது. எல்லாமே வினோதமாக இருந்தது. ஒரு கொலைச் செயலை நிகழ்த்தவிருப்பவனுக்கு இருக்கக்கூடிய ஆகக் குறைந்தபட்சப்...
53. நற்சான்றிதழ் காந்தி முன்னின்று நடத்திய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்துக்கு இந்தியாவிலிருந்து ஆதரவு திரட்டிக்கொடுத்த தலைவர்களில் கோகலேவுக்கு...
பால கணேஷ். அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.
கட்டுரையில் என் தொடர்பான இரண்டு சந்தேகங்கள்.
1. நீங்கள் குறிப்பிடும் ‘ரெஸாக்’ என்பவர் மைலாப்பூர் அருண்டேல் தெருவில் இருந்தவரா? ஏனெனில், அவருடனும் அவருடைய மகன்களுடனும் ஒரு காலத்தில் எனக்கு நிறைய தொடர்பு இருந்தது. ஆனால், அவருடைய மகன்கள் சித்திரங்கள் வரைவதில் (இன்னும்) ஈடுபடுகிறார்களா என்பது சந்தேகமே! ஏனெனில், மதிப்பிற்குரிய ‘ரெஸாக்’ அவர்கள் ‘லேமினேஷன்’ துறையில் நுழைந்த பிறகு அவரைத் தொடர்ந்து அவரது மகன்களும் அதே துறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதே நான் அறிந்த ஒன்று. நிற்க. ரெஸாக் மிகவும் பிரபலமானது அவரது கார்ட்டூன் சித்திரங்களால்தான் என்று என் தகப்பனார், மறைந்த திரு நெ.சி. தெய்வசிகாமணி அவர்கள், கூறுவார்கள். ஆர்.கே. லக்ஷ்மணனை நினைவு படுத்தும் கோட்டோவியக் கேலிச் சித்திரங்கள்.
2. சித்ரலேகாவின் மகன் ‘ராஜா’ பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் என் Nandagopal Daivasigamani முகநூல் பக்கத்தில் ‘உள்பெட்டி’யில் பகிருங்களேன். அவர் பற்றி ‘தொலைந்து போன மகன்’ போன்ற உணர்வு எனக்குள் இருக்கிறது. என் மனதிற்கு நெருக்கமானவன்.